2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந்து போட்டி? -

2021 தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் | கமல்-ரஜனி இணைந்து போட்டி?

நவம்பர் 19, 2019

File photo of Rajinikanth and Kamal Haasan
ரஜனி, கமல்

தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக, 2021 இல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் கமல் ஹாசனின் கட்சியுடன் இணைந்து போடியிடத் தான் தயாராகவுள்ளதாக நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜனி மக்கள் மன்றத்துடன் கூட்டாகத் தேர்தலில் போட்டியிடுவதில் தனக்குத் தயக்கமில்லை எனக் கமல் ஹாசன் கூறியிருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில் மேற்படிக் கூறினார் ரஜனி.

“தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக இணையவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நாங்கள் இருவரும் நிச்சயமாக இணைந்து போட்டியிடுவோம்” எனச் சென்னை விமானநிலையத்தில் ஊடகவியலாளரைச் சந்தித்த்போது அவர் தெரிவித்தார்.

“எனக்கும் ரஜனிகாந்திற்குமிடையில் புதிதாகப் பிணைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. நாங்கள் கடந்த 44 வருடங்களாக நண்பர்களாகவிருக்கிறோம். தேவையேற்படின், தமிழ்நாட்டின் நன்மைக்காக நாங்கள் ஒன்றாகச் சேர்வோம்” எனக் கமல் ஹாசன் தெரிவித்தார்.

2019 மக்களவைத் தேர்தலில் ரஜனிகாந்த் வேட்பாளார் எவரையும் தேர்தலில் நிறுத்தவில்லை. 2021 இல் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் தான் கண்ணாயிருப்பதாக அவர் அப்போது கூறியிருந்தார்.

கமல் ஹாசனின் மக்கள் நீதி மன்றம் கட்சி தமிழ் நாட்டில், 39 மக்களவைத் தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் 1 தொகுதியிலும் போட்டியிட்டிருந்தது. 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்திருந்தனர். சில தொகுதிகளில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை மக்கள் நீதி மன்றம் பெற்றிருந்தது.

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ” பழனிச்சாமி முதலமைச்சராவதைப் பற்றிக் கனவுகூடக் கண்டிருக்கமாட்டார். அது அவர்க்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்னும் கருத்துப்படப் பேசியிருந்தார். அதற்குப் பதிலளித்த பழனிச்சாமி, தான் தனது கடும் உழைப்பினால் படிப்படியாக உயர்ந்தேனே தவிர அதிர்ஷ்டத்தால் முதலமைச்சராக வரவில்லை எனக் கூறியிருந்தார். இவ் விடயம் தொடர்பாகவும் கமல் ஹாசன் நண்பர் ரஜனிகாந்திற்கு ஆதரவாகக் கருத்துக் கூறியிருந்தார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  முஸ்லிம் சமஸ்கிருதப் பேராசிரியர் நியமனத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)