2015 ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் செய்த சூழ்ச்சியாலேயே நான் தோற்கடிக்கப்படேன் – சாடுகிறார் மஹிந்த

நவம்பர் 2019 ஜனாதிபதி தேர்தல் மூலம் புதிய அரசியலமைப்பினால் பிளவுபடவிருந்த நாடு காப்பாற்றப்பட்டிருக்கிறது – மஹிந்த ராஜபக்ச

“1970 இல் சோசலிச அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் ரஷ்ய அல்லது சீன அரசாங்காங்கள் பின்னணியில் இருந்தன என்று யாரும் சொல்லவில்லை. 1977 இல் முதலாளித்துவ அரசு ஆட்சியமைத்தபோது, அமெரிக்காவோ அல்லது பிரித்தானியாவோ அதைக் கொண்டுவந்தன என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெளிநாடுகளின் தலையீடு இருந்தது” என நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோது மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

“2009 இல் நாம் போரில் வெற்றியை நிலைநாட்டியபிறகு, சில வெளிநாட்டு சக்திகள் இலங்கையின் அரசியலில் தலையிட ஆரம்பித்தன. 2010 இல் அது ஆரம்பித்தது ஆனால் இந்த நாட்டின் மக்கள் அப்போது அதைத் தீர்க்கமாக முறியடித்திருந்தார்கள். இருப்பினும் 2015 ஜனாதிபதி தேர்தல் வரை அத்தலையீடு தொடர்ந்து ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஐ.தே.கட்சியின் தலைவரைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு பொதுவான ஒருவரை வேட்பாளராகத் தெரிவதன் பின்னால் யார் இருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.2015 இல் நடைபெற்ற ஆட்சி மாற்றம் இலங்கையை வெளிநாட்டுப் படையொன்று ஆக்கிரமித்துக் கைப்பற்றியதற்கு ஒப்பானது. இந் நாட்டின் தேசிய சக்திகளை அழித்துவிட்டு புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் நாட்டைப் பிரிப்பதே அவர்களுடைய நோக்கம். போரின் மூலம் சாதிக்க முடியாததை அவர்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் சாதிக்க முயன்றார்கள். 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய நிர்வாகம் வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் திட்டங்கள் நிறைவேற முடியாமல் போனது.

மஹிந்த ராஜபக்ச

“இந் நாட்டின் தேசிய அரசியல் சக்திகள் திட்டமிடப்பட்டு ஒதுக்கப்பட்டார்கள். இந் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதில் எப்போதும் முன்னணியில் இருக்கும் மஹா சங்கங்களை அச்சுறுத்துவதற்காக, பொய்யான காரணங்களைக்கூறி பெளத்த துறவிகளைச் சிறையிலடைத்தார்கள். புத்த கோவில்களிலிலுள்ள யானைகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பெளத்தர்களின் பெரஹராப் பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றார்கள்.

“சில குறிக்கப்பட்ட எமது பாதுகாப்பு படைகளின் உறுப்பினர்கள், ஆகக்குறைந்த தரத்திலுள்ளவர் முதல், பாதுகாப்புப் பிரிவின் தலைவர் ஈறாக, கைது செய்யப்பட்டு வாரங்கள், மாதங்கள், வருடங்களாகச் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் மீது பொய்யான வழக்குகள் சோடிக்கப்பட்டன. அதற்குக் காரணம், இவர்களெல்லாம் வீரர்கள் அல்லர், வெறும் திருடர்களும், கொலைகாரர்களும் மட்டுமே என நமது நாட்டுக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு மக்கள் மனங்களில் மாயையை ஏற்படுத்துவதற்காகவே. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து இன் நாட்டின் பிரதேச இறைமையைப் பாதுகாத்ததற்காக எமது பாதுகாப்புப் படைகளின் மன வைராக்கியத்தை உடைத்து அவர்களைப் பலவீனாமாக்குவதே இந்த ஆக்கிரமிப்புப் படைகள் செய்த வேலை. அத்தோடு தேசீயத்தை முன்னெடுத்த அரசியல்வாதிகளும் அவர்கள் மீதி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மோசமாக வதைக்கப்பட்டார்கள்.

“அவர்கள் பல மாதங்களாகத் தடுப்புக் காவல்களில் வைக்கப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலம் வழக்குகள் பதியப்பட்டன. இந் நாட்டின் தேசிய சக்திகளை அழித்துவிட்டு புதிய அரசியலமைப்பொன்றின் மூலம் நாட்டைப் பிரிப்பதே அவர்களுடைய நோக்கம். போரின் மூலம் சாதிக்க முடியாததை அவர்கள் அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் சாதிக்க முயன்றார்கள். 2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய நிர்வாகம் வெற்றிபெற்றதன் மூலம் அவர்கள் திட்டங்கள் நிறைவேற முடியாமல் போனது.“ஆனாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சதிகாரர்கள் இன்னும் அவர்களது திட்டங்களைக் கைவிடவில்லை. ஜனாதிபதி பதவியேற்று சில நாட்களுள், மேற்கு நாட்டு தூதரகம் ஒன்றின் பணியாளர் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார் என்று அரங்கேறிய நாடகத்தை எல்லோரும் பார்த்தார்கள். சதிகாரர்கள் எமக்கு சுவாசிக்கவே இடம் தராமல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையே அது காட்டுகிறது.

“ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச பத்விக்கு வந்ததும் எதிர்கொள்ள வேண்டியிருந்த பிரச்சினை கோவி-19 கொள்ளை நோய். நியூ சீலந்தையே பிந்தள்ளிவிட்டு, நோயைக் கட்டுப்படுத்துவதில் உலகிலேயே முதனமையாக நாடாக இலங்கை இருக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.