2009 இல் இலங்கை அரசுடன் தொடர்புடைய குழுவே லசந்தாவைக் கொலை செய்தது - கோதபாய -

2009 இல் இலங்கை அரசுடன் தொடர்புடைய குழுவே லசந்தாவைக் கொலை செய்தது – கோதபாய

Spread the love
கலிபோர்ணிய நீதிமன்றத்தில் கோதபாய வாக்குமூலம்

அக்டோபர் 26, 2019

மறைந்த ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கவின் மகள் அமெரிக்காவின் கலிபோர்ணிய நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கோதபாய ராஜபக்ச நிரபராதி எனக் கடந்த வாரம் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

டாக்டர் ராஜித சேனாரத்ன

இத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்குவதற்கு அடிப்படையான காரணம், கோதபாய ராஜபக்ச கொடுத்த வாக்குமூலமாகும். லசந்தா விக்கிரமதுங்க 2009 இல் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு குழுவொன்றினானேலேயே கொலைசெய்யப்பட்டார் என்றும், அப்போது தான் அரசில் கடைமையாற்றிய ஒரு அதிகாரி மட்டுமே என்றும் கோதபாயா நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்திருந்ததையடுத்தே அவர் மீதான வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இவ் வாக்குமூலம் இலங்கை அரசை இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கிறதெனவும் சர்வதேச சமூகம் இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கான சூழ்நிலையை இது உருவாக்கியிருக்கிறதெனவும் ஐக்கிய தேசிய முன்னணித் தலைவர்கள் அச்சமுற்றுள்ளதாக அறியப்படுகிறது.

முந்தய அரசாங்கத்தினால் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டார் என கோதபாய ராஜபக்ச கொடுத்த வாக்குமூலம் மிகவும் ஆபத்தானது எனவும், அது சர்வதேச சமூகம் இலங்கை அரசின்மீது நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கலாமென்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தின செய்தியாளருக்குத் தெரிவித்தார்.

தற்போதைய அரசு சர்வதேச அரங்கில் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியிந்த போதும், இந் நீதிமன்றத் தீர்ப்பு அதைப் பேராபத்தில் மாட்டிவிட்டிருக்கிறது. “சிறீலங்கா ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்ற முந்திய அரசின் நிலைப்பாட்டினையே நாங்களும் பின்பற்றி, நாட்டைச் சர்வதேச சிக்கலிலிருந்து காப்பாற்றி வந்தோம். ஆனால் இவ் வாக்குமூலம் அதையெல்லாம் குழப்பிவிட்டது” என அவர் குறிப்பிட்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இலங்கை | முப்படைகளையும் உஷார் நிலையில் இருக்குமாறு வர்த்தமானி அறிவிப்பு!