2007 இல் இலங்கைக்கான யப்பானின் பொருளாதார உதவியை நிறுத்துமாறு ரணில் கேட்டார் – விக்கிலீக்ஸ்

மெல்லக் கசியும் உண்மைகள்

200 இல், ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இலங்கைக்கு வழங்கும் யப்பானிய பொருளாதார உதவியை நிறுத்துமாறு அப்போது இலங்கை வந்திருந்த விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் கேட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜூலி 23 அன்று வெளியான தனது அதிகாரபூர்வ ருவிட்டர் பதிவில் விக்கிலீக்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளது. அகாஷியுடனான ரணிலின் மேற்குறிப்பிட்ட உரையாடல் ஜூன் 18, 2007 இல் நடைபெற்றிருந்ததாக அது தெரிவித்துள்ளது.

ஜூன் 05, 2007 இல் இலங்கை வந்திறங்கிய அகாஷி, ஜூன் 08, 2007 அன்று இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களோடு இலங்கை நிலைமை பற்றி உரையாடியிருந்தார். 14 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இலங்கை இப்போது அரசியலால் பாரிய பிளவ்டைந்திருப்பதுடன் நம்பிக்கையிழந்ததாகவும் காணப்படுகிறது என அவர் தூதுவர்களுக்குத் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. விக்கிரமசிங்கவின் வேண்டுகோளைப் புறந்தள்ளிய அகாஷி “அரசியல் தலைவர்களின்ன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு இலங்கை மக்கள் பலியாக்கப்படக் கூடாது” எனத் தனிப்பட்ட ரீதியிலும் பின்னர் பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார் என விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

ரணிலிந் வேண்டுகோளை நிராகரித்த அகாஷி, அப்போது எதிர்க்கட்சியாகவிருந்த ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஆளும் கட்சியாகவிருந்த சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விக்கிரமசிங்கவுக்குப் பதிலளித்திருந்தார் என விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.