2005 ஜனாதிபதி தேர்தலில் வடக்கு வாக்காளர்களை ராஜபக்சக்கள் திட்டமிட்டுத் தடுத்தார்கள் – உடைக்கிறார் மேர்வின் சில்வா!
கொழும்பு ஜுன் 09: 2005 ஜனாதிபதி தேர்தலின்போது, ராஜபக்சக்களின் தேர்தல் பிரச்சாரக்குழு, வடக்கு மாகாண மக்களை வாக்களிக்காதவாறு திட்டமிட்டுத் தடுத்தார்கள் என முன்னாள் அமைச்சரும், ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்சவின் முன்னணிப் பாதுகாவலருமான மேர்வின் சில்வா தெரிவித்தார்.
“அவர்கள் தமக்குள் ஒரு குழுவை உருவாக்கி, வடக்கு மாகாண மக்களை வாக்களிக்காமல் செய்வதற்கான உத்திகளைப் பற்றிக் கலந்தாலோசித்தார்கள். அக் குழுவில் ஒரு சட்டத்தரணியும், பத்திரிகை ஒன்றிற்குச் சொந்தக்காரரும் இருந்தார்கள்” என அவர் தெரிவித்தார்.
தேர்தல்கள் நடைபெறுவதற்கு முன் இக் குழு பல கையூட்டு நடவ்டிக்கைகளிலும் ஈடுபாட்டிருந்தது என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2005 இல் முதன் முதலாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
தான் அப்போது ராஜபக்சவை ஆதரித்ததால் இது பற்றி எதுவும் பேசவில்லை எனவும் சில்வா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பெரும்பாலும் வாக்களிக்காமல் விட்டதனால் தான் மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதியாக முடிந்தது என்பது ஏற்கெனவே அறியப்பட்ட விடயம்.
