“20 வது திருத்தத்தில், 19வது அரசியல் திருத்தத்தில் உள்ள, இரட்டைக் குடியுரிமை பற்றிய சரத்து பாதுகாக்கப்பட வேண்டும்” என ஜனநாயக இடது முன்னணியின் தலைவர், அமைச்சர் வாசுதேவ நாணயயக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கியூபாவின் தூதுவரைச் சந்தித்த பின்னர் ஊடகங்கலைச் சந்தித்த போது அவர் “தகவல்களைப் பெறுவதற்கான உரிமை, ஜனாதிதிபதியின் பணிக்காலத்தை 5 வருடங்களுக்குக் கட்டுப்படுத்துதல், ஜநாதிபதி பதவிக்கு ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாமை, இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாமை என்பது போன்ற பல நல்ல அம்சங்கள் 19வது திருத்தத்தில் இருக்கின்றன. அதை முற்றாக நிராகரிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
சமாகி ஜன பலவேகய கட்சி, இருபதாவது திருத்தம் தொடர்பாக நீதிமன்றம் போவது பற்றிக் கருத்துக்களைக் கேட்டபோது, ” அது ஒரு நல்ல முடிவு. இவ் விடயத்தில் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்பதும் அவசியம்” என அவர் தெரிவித்தார்.