1978 குடியரசு அரசியலமைப்பை ரத்துச் செய்க | பாராளுமன்றத்தில் திரு. சம்பந்தன் தீர்மானம் முன்மொழிவு

1978 குடியரசு அரசியலமைப்பை ரத்துச் செய்க | பாராளுமன்றத்தில் திரு. சம்பந்தன் தீர்மானம் முன்மொழிவு

Spread the love
1978ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்பை ரத்துச் செய்துவிட்டு புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டு வரவேண்டும் என்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் திரு இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றைக் கொண்டுவந்தார்.
“சகல இனங்களின் உரிமைகளையும் நிலைநிறுத்தவல்லதொரு அரசியலமைப்பொன்றை அவர்களின் பூரண சம்மதத்தோடு நடமுறைப்படுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன ஆகிய சகலருமே புதிய அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவோம் என்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும் அவர்கள் ஒருவரும் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 90 வீதத்துக்கும் அதிகமான மக்கள் புதிய அரசியலமைப்பொன்றுக்குச் சாதகமாகவே வாக்களித்திருந்தார்கள். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான தீர்மானம் ஒன்று மார்ச் 2015 இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது” என்றும் தான் இப்போது கொண்டுவரும் தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டுமென்றும் திரு சம்பந்தன் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போது கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email