Spread the love

பொருளடக்கம்:

  1. அகிலேசபிள்ளை வே. – V Akilesapillai (1853 – 1910)
  2. அகிலேஸ்வரசர்மா சி, மண்டைதீவு – S Akilesvarasarma 19-20ம் நூற்றாண்டு
  3. அப்துல் ரகுமான், நாவலப்பிட்டி – Navalappitti Abdul Rahuman (1846-1920)
  4. அப்பாச்சாமி ஐயர் கா, வசாவிளான்- K Appasamy Iyer 19ம் நூற்றாண்டு
  5. அப்பாத்துரைப்பிள்ளை, மு. நவாலி – Navaali M Appathuraipillai 19ம் நூற்றாண்டு
  6. அப்புக்குட்டி ஐயர் – Appukkuddi Iyer (1788 – 1863)
  7. அம்பலவாண பண்டிதர், யாழ்ப்பாணம் – Ambalavana Pandithar (1878)
  8. அம்பிகைபாகர் – Ambihaipahar (1884 -1904)
  9. அமிர்தலிங்கம்பிள்ளை, சி.தா. – C.T. Amirthalingampillai 19ம் நூற்றாண்டு
  10. அரசகேசரி – Arasakesari நல்லூர் 16- 17 ம் நூற்றாண்டு
  11. அருணாசலம்(ஆசையர்) – Arunasalam – அராலி
  12. அனந்தசுப்பையர், க – வண்ணார்பண்ணை – K Anandasuppaiyar 19ம் நூற்றாண்டு
  13. ஆறுமுக நாவலர் – Arumuga Navalar (1822- 1879)
  14. ஆறுமுகப்பிள்ளை, சி. உடுப்பிட்டி – C. Arumugapillai 19ம் நூற்றாண்டு
  15. ஆறுமுகம்பிள்ளை – Arumugampillai, வட்டுக்கோட்டை, 19ம் நூற்றாண்டு
  16. ஆறுமுகம் க. – K Arumugam 19ம் நூற்றாண்டு
  17. இராமலிங்க ஐயர், ச.(நல்லூர்) – Nallur S Ramalinga Ayer (1649 – )
  18. இராமலிங்கச் சட்டம்பியார், ப. (புங்குடுதீவு) 19ம் நூற்றாண்டு
  19. இராமலிங்கம், வ. (சுதுமலை) – Suthumalai V Ramalingam ( – 16.02.1885)
  20. இராமலிங்கம், வே. உடுப்பிட்டி- Uduppiddi V Ramalingam 19ம் நூற்றாண்டு
  21. இன்பகவி 19ம் நூற்றாண்டு
  22. ஏரம்பையர் – Erampaiyar (1847 – 1914)
  23. கணபதி ஐயர் Kanapathy Ayer 19ம் நூற்றாண்டு
  24. கதிரவேற்பிள்ளை, தம்பலகாமம் – Thampalakaamam Kathiravetpillai 19ம் நூற்றாண்டு
  25. கந்தப்ப சுவாமிகள், யாழ்ப்பாணம் – Kanthappa Swami
  26. கந்தப் பிள்ளை – Kanthapillai (1766 – 1842)
  27. கனகசபைப் புலவர், அளவெட்டி – Alaveddi Kanagasabai Pulavar (1825 – 1873)
  28. குமாரசாமிப் பிள்ளை, சுன்னாகம் – Chunnakam Kumarasamipillai (19-20ம் நூற்றாண்டு)
  29. குமாரசுவாமி முதலியார், உடுப்பிட்டி – Uduppiddi Kumaraswami Muthaliyar (1791 – 1874)
  30. கூழங்கைத் தம்பிரான் – Koolangkai Thampiran – (-1795)
  31. சபாபதி நாவலர் Sabapathy Navalar (1846 – 1903)
  32. சரவணமுத்தன் அ. – A Saravanamuththan (1890 – 1930)
  33. சிற்றம்பலப் புலவர் – Sittambalapulavar 18ம் நூற்றாண்டு
  34. சின்னத்தம்பிப் புலவர், இணுவில் – Inuvil Sinnathamby Pulavar 19ம் நூற்றாண்டு
  35. சின்னத்தம்பிப் புலவர், நல்லூர் – Nallur Sinnathamby Pulavar 18ம் நூற்றாண்டு
  36. சுப்பையர், யாழ்ப்பாணம் – Suppaiyar 18ம் நூற்றாண்டு
  37. செல்லையா பிள்ளை, மானிப்பாய் – Sellaiyah Pillai 19ம் நூற்றாண்டு
  38. சேனாதிராய முதலியார் – Senathiraya Muthaliyar (1750 – 1840)
  39. சோமசுந்தரப் புலவர் – Somasundara Pulavar (1878 – 1953)
  40. ஞானப்பிரகாச சுவாமிகள் – Gnanapirakasa Swamikal
  41. ஞானப்பிரகாச தேசிகர், யாழ்ப்பாணம் – Gnanapirakasa Thesikar 17ம் நூற்றாண்டு
  42. நாகேசையர், இ. வட்டுக்கோட்டை I. Nagesaiyer ( – 1862)
  43. தம்பிமுத்துப்பிள்ளை – Thampimuthupillai (19ம் நூற்றாண்டு)
  44. தாமோதரம் பிள்ளை, சி.வை. – C V Thamotharampillai (1832 – 1901)
  45. பூபாலபிள்ளை – Poobalapillai (1856 – 1921)
  46. பேதுறுப்புலவர், தெல்லிப்பழை – Pethuru Pulavar 18ம் நூற்றாண்டு
  47. பேரம்பலப்புலவர் – Perampala Pulavar (1859 – 1938)
  48. பொன்னம்பல பிள்ளை , மாவை – Ponnambala Pillai 19ம் நூற்றாண்டு
  49. மயில்வாகனப் புலவர், மாதகல் – Mayilvagana Pulavar (1779 – 1816)
  50. மாப்பாண முதலியார், எழுதுமட்டுவாள் – Mappana Muthaliyar 19ம் நூற்றாண்டு
  51. முருகேசப் பண்டிதர், சுன்னாகம் – Chunnakam Murukesa Pandithar 19ம் நூற்றாண்டு
  52. முத்துக்குமார சுவாமிகள் – Muthukumara Swamikal 19-20ம் நூற்றாண்டு
  53. வரதராச பண்டிதர், சுன்னாகம் – Chunnakam Varatharasa Pandithar – 18-19ம் நூற்றாண்டு
  54. மொட்டை வேலாப் போடியார் – Mottai Velaapodiyaar (1804 – 1880)
  55. விபுலாநந்தர் – Swami Vipulanandar (1892 – 1947)
  56. வேலுப்பிள்ளை க. வயாவிளான் – Kalladi Veluppillai (1860 – 1944)
  57. வேலுப்பிள்ளை, திருகோணமலை – Veluppillai 19ம் நூற்றாண்டு
  58. வேலுப்பிள்ளை, வட்டுக்கோட்டை Vaddukkoddai Veluppillai
  59. வேற்பிள்ளை, க. – K Vetpillai (1847 – 1930)
  60. வைத்தியநாத தம்பிரான், யாழ்ப்பாணம் – Vaithiyanatha Thampiran 17ம்நூற்றாண்டு
  61. வைத்தியலிங்க பிள்ளை, வண்ணார்பண்ணை – Vaithiyalingapillai 19ம் நூற்றாண்டு
  62. வைத்தியலிங்கம், க. வண்ணார்பண்ணை – K Vaithiyalingam 19-20ம் நூற்றாண்டு
  63. வைத்திலிங்கம் பிள்ளை, வல்வை – Vaithilingam Pillai (1843 – 1901)

 

அகிலேசபிள்ளை வே. – V Akilesapillai (1853 – 1910):

திருகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். இராசக்கோன், அழகக்கோன் என்போரின் தந்தை. குமாரவேலுப்பிள்ளையிடமும் சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளையிடமும் தமிழ் இலக்கியலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்றப் பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர். திருகோணமலையிலே விசுவநாதசுவாமி கோயில், மடத்தடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் முகாமையாளராகச் சேவை புரிந்தவர்.

ஊசல் சித்தி விநாயகர் ஊஞ்சல்
சிவகாமியம்மன் ஊஞ்சல்
பத்திரகாளி ஊஞ்சல்
கலிவெண்பா கந்தசாமி கலிவெண்பா
கும்மி திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி
பத்து சித்திர வேலாயுதசாமி தரிசனம்
மயிற்பத்து
வேற்பத்து
பதம் வில்லூன்றிக் கந்தசாமி பதம்
பதிகம் கந்தசாமி பதிகம்
மாலை நெஞ்சறிமாலை
விருத்தம் கந்தசாமி விருத்தம்
திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம்
விசுவநாதர் விருத்தம்
வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம்
வைபவம் திருக்கோணாசல வைபவம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அகிலேஸ்வரசர்மா சி, மண்டைதீவு – S Akilesvarasarma 19-20ம் நூற்றாண்டு:

அந்தாதி திருவெண்காட்டந்தாதி
ஊஞ்சல் திருவெண்காட்டு சித்தி விநாயகர் ஊஞ்சல்
கும்மி திருவெண்காட்டீசர் கும்மி
பண்ணைப்பாலக் கும்மி
பதிகம் முருகன் கீர்த்தனைப் பதிகம்
மதுரை மீனாட்சியம்மன் பதிகம்
பஞ்சரத்தினம் நடராஜபஞ்சரத்தினம்
கீர்த்தனை மதுரை மீனாட்சியம்மன் கீர்த்தனை
Related:  1983 கலவரம் | கறுப்பு ஜூலை

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அப்துல் ரகுமான், நாவலப்பிட்டி – Navalappitti Abdul Rahuman (1846-1920):
 

கும்மி அகீதாக் கும்மி
மாலை சரந்தீவு மாலை
நாச்சியார் மாலை

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அப்பாச்சாமி ஐயர் கா, வசாவிளான்- K Appasamy Iyer 19ம் நூற்றாண்டு:

புராணம் நகுலகிரி புராணம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அப்பாத்துரைப்பிள்ளை, மு. நவாலி – Navaali M Appathuraipillai 19ம் நூற்றாண்டு:

யாழ்ப்பாணம் நவாலி முத்துத்தம்பியின் புதல்வர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்தவர்.

மாலை சுந்தரமூர்த்தி சுவாமிகள் மாலை
மஞ்சரி நல்லைச் சுப்பிரமணிய மும்மணி மஞ்சரி(1894)
அந்தாதி மருதடியந்தாதி(1891)

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அப்புக்குட்டி ஐயர் – Appukkuddi Iyer (1788 – 1863):

வாலசுப்பிரமணியஐயர் எனும் மறுநாமமுடையவர். நல்லூர் சிகிவாகனஐயரின் புதல்வர். நல்லூர் கந்தசுவாமி கோயில் அர்ச்சகர். யாழ்ப்பாணம் மாவட்ட நீதித்தலத்தில் புறக்டராக அநுமதி பெறவும் பதிவு செய்யவும் எட்வேட் பாண்ஸ் பிரபுவிடம் 1825இல் உத்தரவு பெற்றவர்.

பிள்ளைத்தமிழ் நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ்
புராணம் சூதுபுராணம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அம்பலவாண பண்டிதர் – யாழ்ப்பாணம் – Ambalavana Pandithar (1878)

கோப்பாய் அருளம்பல முதலியாரின் கனிஷ்ட புத்திரன். இருபாலைச் சேனாதிராய முதலியாரிடைய மாணாக்கருள் ஒருவர். பல தனிப்பாக்களைப் பாடியுள்ளார். சி.வை.தாமோதரம்பிள்ளை அம்பலவாண பண்டிதர் மீது பாடிய சமரகவி:

தெல்லி நகரந் திருவிழந்ததோதமிழ்மா

தில்லந் தனையின்றிழந்தாளோ- சொல்லரிய

வித்தார வாய்மை விறலம்பலவாணன்

செத்தானென்றாரோ சிவா

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அம்பிகைபாகர் – Ambihaipahar (1884 -1904):

அந்தாதி இணுவை அந்தாதி

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அமிர்தலிங்கம்பிள்ளை, சி.தா. – C.T. Amirthalingampillai 19ம் நூற்றாண்டு:

ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் புதல்வர். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்றவர்.

பிள்ளைத்தமிழ் சாலை விநாயகர் பிள்ளைத் தமிழ்
மாலை தணிகேசர் மாலை (1881)

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அரசகேசரி – நல்லூர் – Nallur – 16-17ம் நூற்றாண்டு

யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகர சக்கரவர்த்தியின் மருமகன்.தமிழ் மொழியிலும் சமஸ்கிருத்ததிலும் வல்லவர்.காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழிற் புராண நடையாய்ப் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார்.

காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்று இடம்பெறுகின்றது.

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அருணாசலம்(ஆசையர்)-அராலி – Arunasalam

சோதிடம் காரிகை என்னும் நூல்களில் முக்கிய பேரெடுத்தவர்.மாதகலைச் சேர்ந்த வித்துவ சிரோண்மணி சிற்றம்பலப் புலவருடைய மாணவர். சண்முகச் சட்டம்பியார்,முத்துக்குமாரு என்போர் இவரது மாணவர்கள்.பல தனிப்பாக்களைப் பாடியவர்.

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

அனந்தசுப்பையர், க – வண்ணார்பண்ணை – K Anandasuppaiyar 19ம் நூற்றாண்டு:

கலிவெண்பா வண்ணைநகர் தையல்நாயகி கலிவெண்பா
ஊஞ்சல் வண்ணைநகர் தையல்நாயகி திருவூஞ்சல்
ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

ஆறுமுக நாவலர் – Arumuga Navalar (1822- 1879):

தலபுராணம் தேவகோட்டைத் தலபுராணம்
பரிகாரம் சிவதூடணப் பரிகாரம்
போதம் சுப்பிரபோதம்
மான்மியம் சிதம்பர மான்மியம்
விதி திருவாசக பூசா விதி
விருத்தம் அராலிச் சித்தி விநாயகர் விருத்தம்
திருச்செந்தில் சந்த விருத்தம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

ஆறுமுகப்பிள்ளை, சி. உடுப்பிட்டி – C. Arumugapillai 19ம் நூற்றாண்டு:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் உடுப்பிட்டி என்னுமூரில் வாழ்ந்தவர். அப்புக்குட்டி உபாத்தியாயர் என்றழைக்கப் பெற்றவர். வல்வை ச. வயித்தியலிங்க பிள்ளையிடம் தமிழ் இலக்கியலக்கணங் கற்றவர். வைமன் கதிரவெற்பிள்ளையின் அகராதி வேலையில் உதவியாக விளங்கியவர். அவர் தந்தையாரின் பாடல்களை “குமாரசாமி முதலியார் கவித்திரட்டு” என 1887ல் தொகுத்து வெளியிட்டவர். கிறித்துப்பலப்பிரிவினை, கிறிஸ்துசமய பேதம் (1889), விவிலியநூல் வரலாறு (1889) எனும் கண்டன நூல்களைக் கிறிஸ்தவருக்கு எதிராக எழுதியவர்.

பதிகம் நெற்கொலு வைரவர் பதிகம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1
ஆறுமுகம்பிள்ளை – Arumugampillai, வட்டுக்கோட்டை 19ம் நூற்றாண்டு:

விதி ஆசௌச விதி

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

ஆறுமுகம் க. – K Arumugam 19ம் நூற்றாண்டு:

அந்தாதி திரிகோணமலை அந்தாதி

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

இராமலிங்க ஐயர், ச.(நல்லூர்) – Nallur S Ramalinga Ayer (1649 – ):

இராமலிங்க முனிவர் எனவும் அழைக்கப்பட்டவர். சந்திரசேகரஐயரின் புதல்வர். யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். அராலி மேற்கில் வசித்தவர். சகம் 1590க்குச் சமமான பிலவங்க வருடம் வைகாசி மாதம் (1667) ஈழத்தில் முதன் முதலாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துக் கரலிகிதமாய் வெளிப்படுத்தியவர். சந்தானதீபிகை எனும் சோதிட நூலை 1713இல் சங்கததிலிருந்து மொழிபெயர்த்துப் பாடியவர். அது புரசைப் பாக்கம் விவேக விளக்க அச்சுக்கூடத்தில் 1868இல் அச்சிடப்பெற்றது. அதனைச் சு. நடராசையர் பரிசோதித்துப் பொழிப்புரை செய்ய, ச. இ. சிவராமலிங்கையர் 1901ஆம், 1940ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தனர்.

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

இராமலிங்கச் சட்டம்பியார், ப. (புங்குடுதீவு) 19ம் நூற்றாண்டு:

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பரமானந்தரின் புதல்வர். சேதுநாதர் என்பவரிடம் கல்வி கற்றவர்.

பதிகம் புங்குடுதீவு கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம்
பாட்டு கப்பற்பாட்டு
புயற்பாட்டு

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

இராமலிங்கம், வ. (சுதுமலை) – Suthumalai V Ramalingam ( – 16.02.1885):

யாழ்ப்பாணம் சுதுமலை என்னுமூரினர். குலநீதிவல்ல மாப்பாண முதலியார் மரபினர். ஆனைக்கோட்டை கு. வயிரமுத்து உடையாரின் புதல்வர்.

அந்தாதி சுதுமலை சங்களை அம்மன் அந்தாதி
விலாசம் தமயந்தி விலாசம்
மாணிக்கவாசகர் விலாசம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1
இராமலிங்கம், வே. உடுப்பிட்டி- Uduppiddi V Ramalingam 19ம் நூற்றாண்டு:<.a>

புராணம் கோட்டுப் புராணம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

இன்பகவி 19ம் நூற்றாண்டு:

குறவஞ்சி கச்சேரி முதலியார் குறவஞ்சி
முத்துக்கிருட்டினன் குறவஞ்சி
யாழ்ப்பாணத்துச் செல்வர் குறவஞ்சி

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

ஏரம்பையர் – Erampaiyar (1847 – 1914, மாதகல்):

ஊசல் கதிரேசர் ஊஞ்சல்
கவணாவத்தை வைரவர் ஊஞ்சல்
குவாலாலம்பூர் சிவபெருமான் ஊஞ்சல்
மாதகற் பிள்ளையார் ஊஞ்சல்
தோத்திரம் நாகேசுவரி தோத்திரம்
நீதி நீதிசாரம்
புராணம் நகுலாசல புராணம்
வினாவிடை ஆசௌச வினாவிடை (1912)
விதி சிரார்த்த விதி

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

கணபதி ஐயர் Kanapathy Ayer 19ம் நூற்றாண்டு:

பாட்டு கப்பற்பாட்டு
குறவஞ்சி வண்ணை வைத்தியலிங்க குறவஞ்சி
பதிகம் வட்டுநகர் பிட்டிவயல் பத்திரகாளிப் பதிகம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1

கதிரவேற்பிள்ளை, தம்பலகாமம் – Thampalakaamam Kathiravetpillai 19ம் நூற்றாண்டு:

பதிகம் கோணேசர் பதிகம்

17ம் - 19ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள் 1