• Post category:SRILANKA / INDIA
  • Post published:December 31, 2020
Spread the love

இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பின் மூலம் 13 வது திருத்தம் முற்றாக ஒழிக்கப்படுவதற்கு இலங்கை ஆட்சியாளர் மேற்கொண்டுவரும் முயற்சிகளை நிறுத்தும்படி தி.மு.க. இந்தியப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான 13 வது திருத்தம் இல்லாதொழிக்கப்பட்டால் அது அந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும் என திராவிட் முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ரி.ஆர்.பாலு பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

13 வது திருத்தத்தில் குறிப்பிட்டதற்கு மேலாக மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வைத் தருவதாகக் கூறிய இலங்கை அரசு இப்போது மாகாண சபைகளையே இல்லாதொழிக்க முயலும்போது இந்தியா வெறும் பார்வையாளராக மட்டும் இருப்பதா எனவும் இவ் விடயத்தில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு இலங்கையின் இம்முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனெ ரி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email