13 வது திருத்தம் அவசியமானது – நரேந்திர மோடி மஹிந்தவுக்கு வலியுறுத்து!
அமைதியையும் நல்லிணக்கத்தையும் தொடர்ந்து முன்னெடுக்க, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைபடுத்துவது அவசியம் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தையின் போது திட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இணைய-வழி மூலமான இந்த் இரு தரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (சனி) நடைபெற்றிருந்தது.
தமிழர்கள் எதிர்பார்க்கும் சமத்துவம், நீதி, சமாதானம், கணியம் ஆகியவற்றை வழங்குவதன் மூலம், பிரிக்கப்படாத இலங்கைக்குள், ஒரு தீர்வை வழங்குமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் பிரதமர் மோடி கேட்டுக்கொணடார். இதி முன்னெடுக்க, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை நிறைவேற்றுவது அவசியம் என அவர் வலியுறித்தினார்.
இரு நாடுகளுக்குமிடையேயான பெளத்த பாரம்பரியத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக, இலங்கைக்கு 15 மில்லியன் டாலர்களை மோடி உதவியாகக் கொடுத்துள்ளார். இந்தியாவிலுள்ள பெளத்த புனித பிரதேசமான குஷிநகருக்கு இலங்கையிலிருந்து யாத்திரீகர்கள் வருவதன் மூலம், இருநாடுகளின் கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்த முடியும் என இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, அமிட் நராங் தெரிவித்தார். அத்தோடு, ஆயுர்வேதம், யோகாசனம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்வதிலும் இந்தியா உதவிசெய்யுமென அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையேயான கலாச்சாரப் பிணைப்பு மிகவும் விசேடமான ஒன்று எனவும், அது தொடர்ந்தும் பேணப்படவேண்டுமெனவும் இரு தலைவர்களும் இணக்கம் கண்டனர். இந்தியாவின் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் கட்டுமானம் பற்றி பிரதமர் ராஜபக்ச குறிப்பிட்டு, அது ஓரளவு நிறைவடைந்து வரும் நிலையில் அதன் திறப்பு விழா வைபவத்துக்கு, பிரதமர் மோடி, சமூகம் தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
மலையக மக்களுக்கு 10,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்திற்காக மேற்கொண்ட புரிந்துணர்வுத் திட்டத்தை, 2020 இலிருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு அதிகரிக்க, இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.