13 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடுகடத்தியது
களவாகக் குடியேற முற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட 13 இலங்கையர்களை அவுஸ்திரேலியா இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது. இன்று காலை அவர்கள் பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கினர்.
இலங்கையர்கள் அனைவரும் சிலாபத்திலிருந்து மீன்பிடிப் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பியனுப்பப்பட்ட அனைவரும் விமான நிலையத்திலுள்ள குடிவரவு அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டனர்.