Sri Lanka

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது – பெளத்த மகாசபையினர் எச்சரிக்கை!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களைக் குழப்புகிறார் எனவும் அத் திருத்தத்தை முற்றாக நீக்கிவிட வேண்டுமெனவும் கோரி நாட்டின் மூன்று பெளத்த மகாசபைகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இத் திருத்தத்தின் மூலம் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படும். அது நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிரதேச ஒன்றிணைப்பு, சுதந்திரம் ஆகியவற்றைப் பாதிக்கும் எனக்கூறி இத் திருத்தத்தை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தக்கூடாது என அவர்கள் கேட்டுள்ளனர்.

13 ஆவது திருத்ததை நீக்குவதற்கு கட்சித் தலைவர்கள் முன்வராவிட்டால் அது முற்றாக நடைமுறைப்படுத்தப்படும் என கடந்த மாதம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அவரது முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருந்ததாயினும் பொதுஜன பெரமுன கூட்டணியின் அங்கத்தவர்களான விமல் வீரவன்ச போன்ற சிங்கள தீவிர்வாதத் தலைவர்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். தற்போது அவர்களுக்கு ஆதரவாக பெளத்த மகாசபையினரும் இறங்கியுள்ளனர்.