Sri Lanka

1008 பானைகளில் செந்தில் தொண்டமானின் பொங்கல்

இலங்கையின் வரலாற்றிலேயே முதன் முதலாக 1008 பானைகளில் பொங்கி கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் சாதனை படைத்திருக்கிறார். திருகோணமலை பெருந்திடலில் ஜனவரி 08 அன்று 500 கோலங்களுடன் நடைபெற்ற இப்பெரு விழாவில் 1500 பரதநாட்டிய தாரகைகள் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்திருந்தனர். இதைவிட இலங்கையில் முதல் தடவையாக தமிழ்நாட்டில் பிரபலமான ஜல்லிக்கட்டு நிகழ்வும் நடந்தேறியிருக்கிறது.

ஜனவரி 06 அன்று மலேசிய பாராளுமன்ற உறுப்பினரான சரவணன் முருகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு ஆட்டத்தில் 200 காளைகளும் 100 காளை அடக்குபவர்களும் பங்குபற்றியிருந்தனர். மதுரை போன்ற தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் வருடா வருடம் தை மாதம் இரண்டாம் வாரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறுகிறது.

திருகோணமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கும் ‘காளைகளைக்’ காணமுடியவில்லை. ஆனாலும் மக்கள் திரண்டு வந்த ஒரு பெருநிகழ்வாக இது இருந்தது. கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் எவரது முகம்களும் காணப்படவில்லை. இலங்கைக் கொடி பட்டொளி வீசிப் பறந்ததை அவதானிக்கக்கூடியதாகவிருந்தது.

sharethis sharing button