Spread the love

தமிழ்த் திரையுலகின் திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு 9 குறும்படங்களாக, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பப்படவிருக்கும் ‘நவரசம்’ என்ற நிதிசேர் நிகழ்ச்சியொன்றை இயக்குனர் மணி ரத்னம் அவரகள் ஏற்பாடு செய்து வருகிறார்.

இதனால் பெறப்படும் வர்மானம், கோவிட் பெருந்தொற்றினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் 10,000 திரைத்துறைக் கலைஞர்கள், பணியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுமெனக் கூறப்படுகிறது.

இவ் விடயத்தில், இயக்குனர் மணி ரத்னத்துடன் கியூப் சினிமா ஜயேந்திரா பஞ்சாபகேசன் அவர்களும்மிணைந்து கொள்கிறார். இதனால் பெறப்படும் வருமானத்தில் இவ்வியக்குனர்கள் எதையும் பெறப்போவதில்லை எனவும் அது முற்று முழுதாக வேலையற்றிருக்கும் கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்குமே கொடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு, கோபம், வீரம், நகைப்பு, காதல் உள்ளிட்ட ஒன்பது உணர்வுநிலைகளயும் நிகழ்ச்சிகளை ஒன்பது குறும்படங்கள் மூலம் வெளிக்கொணர அமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அரவிந்த் சுவாமி, கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பொன்ராம், கே.வி. ஆனந்த், ஹலிதா ஷமீம், ரதீந்திரன் பிரசாத் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பகுதியையும் இயக்குவார்கள்.



சூர்யா, ரேவதி, நித்யா மேனன், பார்வதி திருவோது, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சுவாமி, சித்தார்த், விஜே சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா, கெளதம் கார்த்திக், அஷோக் செல்வன், பூர்ணா, ரித்விகா, றோபோ ஷங்கர், ரமேஷ் திலக், சானந்த் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான், டி. இமான், கிப்ரான், அருள் தேவ், கார்த்திக், றொண் ஈதன், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இந் நிகழ்ச்சிக்கு இசையமைக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்களை பிசி சிறீராம், சந்தோஷ் சிவன், பாலசுப்ரமணியம், மனோஜ் பரமஹம்ச, அபிநந்தன் ராமானுஜம், ஷிரேயாஸ் கிருஷ்ணா, ஹார்ஷ்விர் ஒபெராய், சுஜித் சரங், வீ.பாபு, விராஜ் சிங் ஆகியோர் கவனிக்கிறார்கள்.

திரைக்கதைக்ளை எழுதுவதற்கு பட்டுக்கோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி, சோமீதரன் ஆகியோர் பொறுப்பேற்கிறார்கள்.

கெளதம் மேனனின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பகுதியின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. இதில் சூர்யா ஒரு இசைக் கலைஞனாக நடிக்கிறார்.

Print Friendly, PDF & Email