வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட மாட்டாது – ராஜாங்க அமைச்சர்
ஆகஸ்ட் 14, 2020: 13 வது சட்டத் திருத்தத்தின் கீழ் கூறப்பட்ட காணி, பொலிஸ் அதிகாரங்கள், வட மாகாண சபைக்குக் கொடுக்கப்பட மாட்டாது என புதிய மாகாண, உள்ளூராட்சி சபை ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று தன் கடமையை ஆரம்பித்தபோது குறிப்பிட்டார்.
“இந்திய அரசாங்கத்தினூடு, வட மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை எடுத்துக்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடுமையாக முயற்சிக்கின்றனர். அப்ப்டி அதிகாரங்கள் வழங்கப்படின், பொலிஸ் திணைக்களம் பிளவு படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு. நாடு முழுவதும் மாகாண பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் பதவிகள் உருவாக்கப்படவேண்டும். அது நாட்டின் ஒருமைப்பட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும்” என அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்தார்.
