மைத்திரேயி ராமகிரிஷ்ணன் | இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர்களில் ஒருவர் – நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை
மிசிசாகா, ஒன்ராறியோவைச் சேர்ந்த 18 வயது தமிழ்க் கனடிய நடிகையான மைத்திரேயி ராமகிரிஷ்ணன், நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் 2020ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிண்டி கேலிங்கின் இணைத் தயாரிப்பான Never Have I Ever என்னும் நெற்ஃபிளிக்ஸ் நகைச்சுவைத் தொடர் ஒன்றில் நடித்துப் புகழ்பெற்ற மைத்திரேயிக்கு இதுவே முதல் நடிப்பு அனுபவம். 15,000 இளம் நடிகைகளுடன் போட்டி போட்டு இத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சந்தர்ப்பத்தை அவர் பெற்றிருந்தார்.
Never Have I Ever தொடரின் முதலாவது அங்கம் முடிவடைந்து தற்போது இரண்டாவது அங்கத்துக்கான (Season 2) படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அவர் தேவி விஷ்வகுமார் என்ற 16 வயது பள்ளி மாணவியின் பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் மிகச் சிறப்பாக நடித்திருந்தமைக்காக பல ஊடகங்கள், விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்திருந்தன. தற்போது நியூ யோர்க் ரைம்ஸ் பத்திரிகை தனது வருடாந்த சிறந்த நடிகர்கள் பட்டியலில் மைதிரேயியின் பெயரையும் சேர்த்திருக்கிறது.
“எனது 20 எழுத்துப் பெயரை மேலும் பல பட்டியல்களில் ஸெர்ப்பதற்காக நான் கடுமையாக உழைப்பேன்” என நியூ யோர்க் ரைம்ஸின் பாராட்டுக் குறித்து மைத்திரேயி தனது ருவீட் மூலம் கூறியியிருக்கிறார்.
