IndiaTechnology & Science

பிரவேய்க் – இந்தியாவின் ரெஸ்லா?


இந்தியாவின் முதலாவது மின் வாகனத்தைத் தயாரித்திருக்கிறது பெங்களூரைத் தளமாகக் கொண்ட பிரவேய்க் டைனாமிக்ஸ் என்னும் வாகன உற்பத்தி நிறுவனம்.

The Extinction MK1 offers more than 500 kms of range in single charge.
The Extinction MK1 offers more than 500 kms of range in single charge.

முற்று முழுதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, எக்ஸ்ரிங்ஷன் MK1 (Extinction MK1) என்ற மின்வாகனத்தை அது நேற்று (வெள்ளி) அறிமுகம் செய்தது.அடுத்த வருடம் இவ் வாகனம் பாவனையாளருக்கு விற்பனைக்கு வரும்.


ஒரே மின்னேற்றலில் (single charge) 500 கி.மீ. ஓடக்கூடிய இவ் வாகனம் ஃபோக்ஸ்வாகன் ID.3, ரெஸ்லா Model 3 ஆகியவற்றுடந் ஒப்பிடக்கூடிய வினைத்திறனைக் கொண்டது இவ் வாகனம் எனத் தயாரிப்பாளர் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் பாவனையில் இருக்கும் மின்வாகனங்களில் ஹண்டாய் கோணா 452 கி.மீட்டர்களையும், MG ZS 340 கி.மீட்டர்களையும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேர்செடீஸ் EQC 350 கி.மீட்டர்களையும் செய்கின்றன.

மின்வலு முற்றாகப் பாவிக்கப்பட்டபின் மீண்டும் வலுவேற்றும்போது, அரை மணித்தியாலத்துக்குள் அது 80% மான வலுவை ஏற்றிக்கொள்கிறது என்கிறார்கள் பிரவேய்க் நிறுவனம்.



96 kWH வலுவைக் கொண்ட இதன் மின்கலம், வாகனத்தின் உச்ச 196 kM/h வேகத்தில் 200 பரிவலுவைக் கொடுக்கிறது எனவும் பூச்சியத்திலிருந்து 100 கி.மீ. வேகத்தை அடைவதற்கு அதற்கு 5.4 செக்கண்டுகள் பிடிக்கிறது எனவும் பிரவேய்க் தெரிவிக்கிறது.

இரண்டு கதவுகளையும், 4 ஆசனங்களையும், சொகுசான உள் வடிவமைப்பையும் கொண்ட இவ் வாகனம் ஆரம்பத்தில் சந்தா முறையில் பெங்களூர் வாசிகளுக்கு மட்டும் வழங்கப்படும். வருடமொன்றுக்கு 250 வாகனங்களை உற்பத்தி செய்ய பிரவேய்க் திட்டமிட்டுள்ளது.