ஹொங் கொங் போராட்டம் | பல்கலைக்கழகம் சுற்றி வளைப்பு -

ஹொங் கொங் போராட்டம் | பல்கலைக்கழகம் சுற்றி வளைப்பு

உயிராபத்து விளைவிக்கும் ஆயுதங்கள் பாவிப்பு

நவம்பர் 17, 2019

போராட்ட மாணவர்கள் தளமாகப் பவித்து வந்த ஹொங் கொங் பொலிரெக்னிக் பல்கலைக்கழகம் இன்று (திங்கள்) அதிகாலை ஹொங் கொங்க் காவற்துறையின் தாக்குதலுக்கு உள்ளானது. இதன் போது கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், நீர்ப் பீச்சி வாகனங்களையும் காவற்துறை பாவித்தது. பதிலுக்கு மாணவர்கள் பெற்றோல் குண்டுகளாலும், சுய தயாரிப்பு ஆயுதங்களாலும் தாக்கினர். பல்கலைக்கழகம் பலத்த அழிவுக்குள்ளாகியிருக்கிறது.

பல்கலைக் கழகத்தைச் சுற்றி வளைத்துள்ள காவற்துறை, சுற்றி வளைத்துள்ள போதிலும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்றுள்ளதாகவும் பலர் வெளியிலிருந்து கற்றர்புல் கொண்டு பெற்றோல் குண்டுகளால் பிரதான வாசலுக்கும், அருகிலுள்ள பாலங்கள் மீதும் வீசி வருவதாகவும் இதனால் பாரிய குண்டு வெடிப்புகள் நிகழ்வதாகவும் அறிவிக்கப்படுகிறது.

உள்ளே இருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனக் காவற்துறை எச்சரிக்கை செய்தபோதும் போராட்டக்காரர் நகரவில்லை எனவும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் காயப்பட்ட சிலர் அவசர சேவைகள் வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

சென்ற வாரத்திலிருந்தே பல போராட்டக்காரர் வளாகத்தினுள் தம்மைச் சிக்க வைத்துள்ளனர் எனவும் காவற்துறை இவ் வளாகத்தை ஆயுதத் தொழிற்சாலை என வர்ணித்ததாகவும் அல் ஜசீரா ஊடகத்தைச் சேர்ந்த சேரா கிளார்க் தெரிவித்தார்.

Hong Kong

சில போராட்டக்காரர் அம்பு – வில்லைப் பாவித்து காவற்துறையை நோக்கித் தாக்கி வருவதாகவும் ஒரு காவற்துறை அதிகாரியின் காலில் அம்பு ஏறியதால் அவர் அவசர சேவைகள் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் காவற்துறையின் முகநூலில் படம் பதிவாகி உள்ளது.

காவற்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டக்காரர்கள் உயிர் கொல்லும் ஆயுதங்களைப் பாவிக்கக்கூடாது எனவும் அப்படிப் பாவித்தால் தாமும் துப்பாக்கிகளில் உண்மையான குண்டுகளைப் பாவிக்க நேரிடுமெனவும் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் பிரசுரிக்கப்படும் ‘குளோபல் ரைம்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியர் செய்த ருவீட் ஒன்றில் காவற்துறையின் கவச வாகனம் ஒன்று பெற்றோல் குண்டுகளால் தாக்கப்பட்டு தீப்பிடித்து எரியும் காணொளியொன்றைப் பதிவிட்டு ” காவற்துறை உண்மையான துப்பாக்கிக் குண்டுகளைப் பாவிக்க அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.

Related:  மலேசியா - புலிகள் விவகாரம் | பி.குணசேகரன் விடுதலை

இரு தரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான நிலைமைக்கு இட்டுச் செல்கின்ற வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)