ஹிஸ்புல்லா நியமனம் | முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி- துஷார இந்துணில் -

ஹிஸ்புல்லா நியமனம் | முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சூழ்ச்சி- துஷார இந்துணில்

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வேட்பாளர் நியமனம் முஸ்லிம் வாக்குகளைப் பிரிப்பதற்கான சிறீலங்கா பொதுஜன பெரமுன வின் தந்திரோபாயச் சூழ்ச்சி என ஐ.தே.கட்சி யின் பா.உ. துஷாரா இந்துணில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஐ.தே.கட்சியும், சஜித் பிரேமதாசா போன்றோரும் நாட்டை நேசிப்பவர்கள் அல்லர் என்று கூறுவதன் மூலம் பெளத்த சிங்கள மக்களைக் கோதபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்க வைப்பதற்கு ரத்தன தேரர் முயல்கின்றார். அதே போல ஹிஸ்புல்லா சுதந்திரமான வேட்பாளராகக் களமிறங்குவதன் மூலம் முஸ்லிம் மக்கள் எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார். இருவருமே ஒரே முகாமைச் சேர்ந்தவர்கள் தான். இந்த இரட்டை சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளுமாறு நான் சிங்கள பெளத்த மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என இந்துணில் கூறினார்.

“நாங்கள் ஹிஸ்புல்லாவுக்குப் பயந்தவர்களல்லர். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்து மக்கள் அவரை நிராகரித்திருந்தனர். நாங்கள் சொல்வதெல்லாம் ரத்தன தேரரும் ஹிஸ்புல்லாவும் ஒரே மேடையில் இருந்து கோதபாயாவிற்கு ஆதரவு தருகின்றார்கள் என்பதே” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, அக்டோபர் 10, வியாழனன்று காலிமுகத் திடலில் ஆரம்பிக்கவிருக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  இலங்கையில் கன மழை | பல்லாயிரக்கணக்கானோர் இடப்பெயர்வு
error

Enjoy this blog? Please spread the word :)