ஹிஸ்புல்லா, அசாத் சலி பதவிகள் பற்றி ஜனாதிபதி விரைவில் தீர்மானிப்பார் -

ஹிஸ்புல்லா, அசாத் சலி பதவிகள் பற்றி ஜனாதிபதி விரைவில் தீர்மானிப்பார்

ஆளுனர்கள் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா, அசாத் சலி ஆகியவர்களைத் தொடர்ந்தும் அவர்களது பதவிகளில் வைத்திருப்பது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன விரைவில் முடிவு எடுப்பார் என முன்னாள் அமைச்சர் துமிந்த திசனாயக்கா கூறினார்.

கிழக்கு மாகாண மற்றும் மேற்கு மாகாண ஆளுனர்கள் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்பதைத் தீர்மானிப்பதற்கஅக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று விரைவில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக அவர் மேலும் கூறினார். அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடயத்தில் எஸ்.எல்.பி.பி. கட்சியின் 66 அங்கத்தவர்கள் கையெழுத்திட்டு சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறும் என்ற நம்பிக்கை தனக்கில்லை என ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போது துமிந்த திசநாயக்கா இப்படித் தெரிவித்தார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு நடத்திய பேச்சுவார்த்தையின் பிரகாரம் அமைச்சர் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றிய முடிவொன்றைத் தாம் விரைவில் எடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  தொண்டமான், முஸ்தாபா, வாசுதேவ, வீரவன்ச அமைச்சர்களாகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)