NewsSri Lanka

ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடமையாக்க வேண்டும் – ஜே.வி.பி.

தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கலாம் என்ற காரணத்துக்காக, ‘பற்றிக்கலோ கம்பஸ் லிமிட்டட்’ (Batticaloa Campus Ltd.) என்னும் பதிவின் கீழுள்ள முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாவின் மட்டக்களப்ப பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்குவதோடு அதையும் அதன் சொத்துக்களையும் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. பா.உ. டாக்டர் நலிந்தா ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கிறார்.

Photo Credit: Sunday Observer

சட்டத்துக்குப் புறம்பான முதலீடுகளைக் கொண்டு, அரசியல்வாதிகளின் ஆதரவைக் கொண்டு, சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஆரம்பிக்கப்பட்ட ‘பற்றிக்கலோ கம்பஸ் லிமிட்டட்’ இலவச கல்விக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக வந்திருக்கிறது. இது பற்றிக் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வைத் துறையினால் நீண்டகாமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மீதான அறிக்கை தற்போது பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கபட்டிருக்கிறது. அதில் இந்த சட்டத்துக்குப் புறம்பான ஸ்தாபனத்தை அரசுடமையாக்கி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்படவேண்டுமெனப்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும் எனவும் டாக்டர் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டிருந்தார்.டாக்டர் ஜயதிஸ்ஸவின் கருத்துப்படி, முந்நாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் அவரின் நிறுவனமான ஹிறா பவுண்டேசனும் சட்டத்தை மீறியது மட்டுமல்லாது ஆரம்பத்திலிருந்தே அரசை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். “தனியார் பட்டம் வழங்கும் அமைப்புக்களை உருவாக்கும்போது சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். முதலீட்டுச் சபை, உயர் கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியக் குழு, பட்டங்களை வழங்குவதற்கான அனுமதியைத் தரும் அமைப்பு ஆகிய அரச அங்கங்களின் உததரவு பெறாமல் இந்த ஸ்தாபனத்தை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியிருந்தும் இப்படியான உததரவு, ஒழுங்கு முறைகளை எல்லாம் மீறிக்கொண்டு இந்த தனியார்

Photo Credit: Sunday Observer

பட்டமளிக்கும் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டிருக்கிறது”  என அவர் கூறினார்.

“ஹிஸ்புல்லா, அரச அதிகாரத்தையும், பணத்தையும் கொண்டு இந்த நிறுவனத்துக்கான ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். ஜூன் மாதம் 2013 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு யூனிவேர்சிட்டி காலேஜ் என்ற பெயரில் ஹிஸ்புல்லாவின் பெயரிலுள்ள ஹிறா பவுண்டேசன் என்ற நிறுவனத்தின் பதிவின் கீழ் தொழிற்கல்விப் பயிற்சி அளிக்கும் ஸ்தாபனமாக இது ஆரம்பிக்கப்பட்டது. 2016 இல் முதலீட்டுச் சபையுடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டு இக் கல்லூரியை ஒரு வளாகத்தின் அந்தஸ்துக்கு உயர்த்திக் கொண்டுள்ளார்கள். இதற்குத் தேவையான 35 ஏக்கர் நிலத்தை மஹாவெலி அதிகாரசபையிடமிருந்து 35 வருட குத்தகைக்குப் பெற்றுள்ளார்கள். குத்தகைக் கட்டணம் ஒரு ஏக்கருக்கு, வருடத்துக்கு 14,340 ரூபாய்களாகும். ஏழு தடவைகளில் அவர்கள் 24,6 மில்லியன் டாலர்களை சவூதி அரேபியாவிலுள்ள அப்துல்லா அல் ஜபாடி பவுண்டேசனிலிருந்து பெற்றுள்ளார்கள். இப் பணம் சட்டபூர்வமானதா என்பதில் கேள்விகளிருக்கிறது” என்று அவ

Photo Credit: ONLanka

ர் மேலும் கூறினார்.

“எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் அவரது ஹிறா பவுண்டேசனினால் நிலத்தைப் பெறப்பட்ட முறை சட்டவிரோதமானது. தொழிற்கல்விக்கான அனுமதியை முறையான விண்ணப்பங்களினூடு பெறவில்லை. சூழலியல் தாக்கம் பற்றிய அறிக்கை பெறப்படவில்லை. 35 ஏக்கர்கள் நிலமே குத்தகைக்கு பெறப்பட்டதாயினும் மேலதிகமாக 8 ஏக்கர் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் 45 ஏக்கர்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்டிட ம் கட்டுவதற்கான பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை. அரசுசார்பற்ற அமைப்புக்களின் செயலகத்தில் ஹிறா பவுண்டேசன் பதிவு செய்யப்படவில்லை. பெறப்பட்ட பணம் கடனா அல்லது தானமா என்பதை ஹிஸ்புல்லாவினாலோஅல்லது அவரது மகனினாலோ உறுதிப்படுத்த முடியவில்லை. அது கடனாகில் அதை மீளச் செலுத்தும் திட்டம் எதுவுமில்லை. அதை விடவும், ஹிஸ்புல்லா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது தொழிற் கல்வி ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை அரசுடன் செய்வது சட்டத்துக்கு முரணானது. சட்டத்தை மீறியதற்காக ஹிஸ்புல்லா தண்டிக்கப்படலாம்” என்றார் டாக்டர் ஜயதிஸ்ஸ.