'ஹவ்டி மோடி' நிகழ்வில் மோடிக்குப் பலத்த வரவேற்பு! -

‘ஹவ்டி மோடி’ நிகழ்வில் மோடிக்குப் பலத்த வரவேற்பு!

டெக்சாஸ் நிகழ்வில் 50,000 இந்திய-அமெரிக்கர்கள் பங்கேற்பு
ஹூஸ்டன், டெக்சாஸில் 50,000 இந்திய-அமெரிக்கர்களின் வரவேற்பு நிகழ்வில் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும்

அமெரிக்காவிற்கு உத்தியோக பூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடிக்கு டெக்சாஸ் மானிலத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 50,000 இந்திய அமெரிக்கர்கள் கலந்துகொண்ட இவ் வைபவத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் பேசும்போது, “உலகின் இரு பெரிய ஜனநாயக நாடுகளான நாம் இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திலிருந்து இந்திய அமெரிக்கர்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்வோம்” என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இரு நாடுகளும் எல்லைப் பாதுகாப்பு விவகாரங்களில் ஒரே மாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையேயான உறவு முன்னெப்போதுமில்லாதவாறு பலமாக உள்ளது எனவும் இதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் இப்படியொரு நல்ல நண்பர் ஒருவரை இந்தியா கணடதில்லை எனவும், மோடியின் தலைமையில் உலகம் ஒரு பலமான, சுதந்திரமான இந்தியாவைக் காண்கிறது என அவர் தெரிவித்தார்.

ஹூஸ்ரன், டெக்சாஸில், சுமார் 50,000 இந்திய அமெரிக்கர்களின் முன்னிலையில் நடைபெற்ற ‘ஹவ்டி மோடி’ நிகழ்வில் நரேந்திர மோடி பேசும்போது, “உலகம் முழுவதற்கும் அதிபர் ட்ரம்ப் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார் என்றும், உலகின் எந்த மூலை முடுக்குகளிலும் ட்ரம்பின் பெயர் அடிபடாத இடமே இல்லை எனுமளவுக்கு அவர் பிரபலமானவர் என்றும் அவர் இரண்டாவது தவணையிலும் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக வரவேண்டுமென்றும்” சிலாகித்தார். டெக்சாஸில் விலங்குப் பண்ணைகளை வைத்திருக்கும் வெள்ளை அமெரிக்கர்கள் பயன்படுத்தும் 19ம் நூற்றாண்டில் பாவனையிலிருந்த ‘how do you….’ என்பதன் மருவிய வார்த்தையே ‘howdy’ எனத் தற்போதும் வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் சந்திப்பின்போது இந்தியாவுக்கும் அமெரிக்கவிற்குமிடையில் பல பாதுகாப்பௌ ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  நகரசுத்தித் தொழிலாளர் இறப்பில் தமிழ்நாடு முதலிடம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)