Spread the love

பெப்ரவரி 27, 2020

கோவிட-19 நோய்த்தொற்றிலிருந்து அமெரிக்கா தப்புவது தவிர்க்க முடியாதது என அந் நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு மையம் (Centre for Decease Control (CDC)) அறிவித்ததன் மூலம் அது பொதுமக்களைத் தயாராக இருக்கும்படி எச்சரித்திருக்கிறது.

“வியாபார நிலையங்கள், மருத்துவ மனைகள், பாடசாலைகள், தினமும் நடமாடும் மக்கள், தங்களைத் தயார்ப்படுத்தும் நிலைக்கு வாந்தாகிவிட்டது” என நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின், சுவாசநோய்கள் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நான்சி மெசோன்னியெர் ஊடக மாநாடொன்றில் தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்துகளோ, சிகிச்சை வழிகளோ இல்லாத காரணத்தால், மக்கள் தம்மையும், சமூகத்தையும் பாதுகாக்க இதர வழிகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும் என அவர் கேட்டிருக்கிறார்.


அறிகுறிகள்

பொதுவாகப் பருவநிலை மாற்றங்களுடன் வருடா வருடம் வருகின்ற சுரம் இன்ஃபுளுவென்சா A , B வைரஸ்களைப் போலவே, COVID-19 எனப்படும் கொறோனாவைரஸும் சுவாசத்தோடு தொடர்புடைய நோயறிகுறிகளைக் காட்டுகின்றன. அவை, பொதுவாக, சுரம் (காய்ச்சல்) (fever), இருமல் (cough), தொண்டை கரகரப்பு (நோவு)(sore throat), தசைகளில் நோவு (muscle aches), தலைவலி (headaches), மூக்கினால் நீர் வடிதல் அல்லது அடைப்பு (runny or stuffy nose), களைப்பு (fatigue), சில வேளைகளில் வாந்தி (vomiting) அல்லது வயிற்றுப் போக்கு (diarrhea) என நோய்க் கட்டுப்பாட்டு மையம் அறிவித்திருக்கிறது.

இவ்வறிகுறிகள் திடீரென்று தோன்றுகின்றன. இச் சுரம் வந்தவர்கள் பலரும் இரண்டு வாரங்களில் குணம்பெற்று விடுகிறார்கள். சிலருக்கு இது மேலும் சிக்கல்களைத் தோற்றுவித்து விடுகிறது. அதிலொன்று சன்னி (pneumonia). சன்னி (நிமோனியா) வந்தவர்களில் சிலர் மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெறுவது வழக்கம்.

COVID-19 வைரஸின் தாக்குதலின் போது நோயாளிகள் காட்டும் அறிகுறிகள் பற்றியோ அவற்றின் கடூரம் பற்றியோ மருத்துவர்களால் இன்னும் முழுமையான தகவல்களைப் பெற்றுக்க்கொள்ள முடியவில்லை. ஜனவரி 30 இல் மருத்தௌவ சஞ்சிகையான ‘லான்செட்’ இல் வெளிவந்த தகவலின்படி, கோவிட்-19 இனால் தாக்கப்பட்ட 100 நோயாளிகளிடம் பெற்ற தகவல்களைக் கொண்டு அறிந்ததன்படி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் (shortness of breath) ஆகிய அறிகுறிகள் தென்பட்டனவென உறுதிப்படுத்தப்ப்ட்டுள்ளன. இவர்களில் 5% மானோர் தொண்டை அரிப்பும், மூக்கினால் நீர் வடிதலும் அறிகுறிகளெனவும், 1-2% வயிற்றோட்டம், குமட்டல், வாந்தி ஆகியன இருந்தனவெனவும் கூறியிருக்கிறார்கள்.

சீனாவில், டிசம்பர் 31, 2019 முதல் பெப்ரவரி 11, 2020 வரை சேகரிக்கப்பட்ட 44,672 நோயாளிகளின் தகவல்களின்படி 4.7% பேர் (2,087) மிக மோசமான நிலையை அடைந்திருந்தார்கள் எனவும் அவர்கள் எல்லோரும் சுவாசப்பைகள் இயங்காமை, திடீரென இரத்த அழுத்தம் குறைந்தமை (septic shock), ஒரே நேரத்தில் பலவிதமான உறுப்புகளும் இயங்காமற் போனமை (multiple organ failures) ஆகிய அறிகுறிகள் இருந்தனவெனவும் தெரியவந்துள்ளது.

Related:  கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ட்றம்ப் தரும் யோசனை - பரிசோதனைகளைக் குறைக்கும்படி உத்தரவு!

இதில் முக்கியமாக அறியப்பட வேண்டிய விடயமென்னவெனில், கோவிட்-19 வைரஸ் மட்டுமல்லாது, சுவாசப்பை வியாதிகளைக் கொண்டுவரும் இதர வைரஸ்களும் இப்படியான அறிகுறிகளையே காட்டுகின்றன. இதனால் நோயாளிகள் குழம்பி விடாமல், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.


இறப்பு வீதம்

இந்த வருட பருவகால ஃபுளூ வினால் அமெரிக்காவில், நோய் வந்தவர்களில் 0.05% பேர் இறந்திருக்கிறார்கள். சீனாவிலும் இதர நாடுகளிலும் கோவிட்-19 வைரஸினால் இறந்தவர்களின் வீதம் இதைவிட அதிகம். சீநாவில் இது 2.3% ஆகவும் இதரநாடுகளில் இது 0.1% ஆகவும் இருக்கிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் இது 14.8% ஆகவும் 10-39 வயதுவரை உள்ளவர்களில் 0.2% மாகவும் ஏனையவர்கள் இந்த இரண்டு வகையினருக்கும் இடைப்பட்ட வீதங்களிலும் இருக்கிறது. 9 வயதுக்குக் குறந்தவர் எவரும் இறக்கவில்லை.

வைரஸ் பரவும் வேகம்

வைரஸ் பரவும் வேகத்தைக் கணக்கிட விஞ்ஞானிகள் பாவிக்கும் முறையை ” அடிப்படை இனப்பெருக்க எண்” (basic reproduction number) அல்லது R0 (pronounced R-nought). நோய் தொற்றிய ஒருவரிலிருந்து எத்தனை பேருக்கு அந் நோய் பரவுகிறது என்ற அண்ணளவான இலக்கமே இது. 1.3 பேருக்குப் பரவியிருந்தால் அது R0 எனப்படும். சாதாரணமாக ஒருவர் 1.5 முதல் 3.5 பேருக்கு நோயைப் பரவச் செய்வது வழமை. கோவிட் – 19 வைரஸ் தொற்றிய ஒருவர் சராசரியாக 2.2 பேருக்கு அதைப் பரப்புகிறார் என ‘நியூ இங்கிலண்ட் ஜேர்ணல்’ என்ற சஞ்சிகை தெரிவிக்கிறது.

தடுக்கும் முறைகள்

சாதாரண பருவகால ஃபுளூவிற்குக் குடும்ப வைத்தியர்கள் தரும் தடுப்பு மருந்துமருந்து (vaccine) போல் கோவிட்-19 வைரஸுக்குத் தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் நோய்க் கட்டுப்பாட்டு மையம் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கிறது:

ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்
 • உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு 20 செக்கண்டுகளுக்கு மேல் கழுவிக்கொள்ளுங்கள். 60%-95% அல்கொஹோலைக் கொண்ட கிருமியகற்றும் பதார்த்தங்களை (hand sanitizers) பாவியுங்கள்
 • கழுவப்படாத கைகள் மூலம் கண்கள், மூக்கு, வாயைத் தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
 • சுகவீனமுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பைத்துக்கொள்ளாதீர்கள்
 • சுகவீனமுற்றிருந்தால் வீட்டைவிட்டு வெளியே எங்கேயும் செல்லாதீர்கள்
 • நீங்கள் கையாளும் பொருட்களை அடிக்கடி கிருமியழிப்புப் பதார்த்தஙகளைக் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்
 • இருமும் மோதும், தும்மும் போதும் முகத்தை முழங்கை, கடதாசி அல்லது துணியினால் மூடிக்கொள்ளுங்கள்
 • ஃபுளூ தடுப்பூசி இதுவரை போட்டிராவிட்டால், அதைப் போட்டுக்கொள்ளுங்கள்
 • வீட்டிலிருந்தே வேலை செய்யக்கூடியவர்கள், முடியுமானால் அலுவலகங்களுக்குப் போவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
 • அதிக மக்கள் சேரும் கூட்டங்களையும், விழாக்களையும், மதச் சடங்குகளையும், பொதுச் சந்திப்புக்களையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
 • போதுமான அளவு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்

உங்கள் வீட்டில் ஒருவர் COVID-19 அறிகுறிகளைக் கொண்டிருந்தால் என்ன செய்யவேண்டும்?
 • உங்கள் வீட்டிலுள்ள ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெறுங்கள். குழந்தைகள் சுவாசிப்பது விரைவாக இருப்பின் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்
 • வீட்டில் நோய்த் தொற்றுள்ள ஒருவர் வசித்தால் உங்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி அதிகாரிகள் கேட்கலாம்.
Related:  பிரேசில் | சுதேசிகளைக் கொன்றொழிக்கும் கொறோணாவைரஸ்
ஒரு சுகதேகி நோய்த்தொற்றுள்ள இடத்திற்குப் போவதானால் என்ன செய்ய வேண்டும்?
Print Friendly, PDF & Email