வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் ஆரம்பமாகியது – 9ம் திகதி முடிவுகள் அறிவிக்கப்படும்!

Spread the love
ஆகஸ்ட் 7, 2019
பின்போடப்பட்டிருந்த வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்தும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமியும் இவர்களைத் தவிர மேலும் 28 பேர்களும் போட்டியிடுகிறார்கள்.
வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலிஅ 6 மணி வரை நடைபெறும். 9ம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர் தொகுதியில் மொத்தம் 1,432,555 வாக்காளர்கள் பதிவில் உள்ளனர். 1553 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியாத்தம், அணைக்கட்டு, வாணியம்பாடி, வேலூர், கே.வி.குப்பம், ஆம்பூர் என 6 சட்டசபைத் தொகுதிகள் இந் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்குகின்றன.
2014 தேர்தலில் அ.தி.மு.க. இத் தொகுதியில் வெற்றியீட்டியிருந்தது.
Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>