வேலூர் தேர்தல் | 8141 வாக்குகளால் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி?

Spread the love
ஆகஸ்ட் 9, 2019

பி.ப. சுமார் 3:30 அளவில் வாக்குகள் எண்ணப்படுவது நிறைவுக்கு வந்தது. சுமார் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளதாக உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொகுதியில் மக்களவைக்காக நடைபெற்ற தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்திற்குமிடையில் கடும் போட்டி நிலவுவதாகவும் நா.த.க. வேட்பாளர் தீபாலட்சுமி மூன்றாமிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இன்று காலை சென்னை நேரம் 8:00 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுவது ஆரம்பமானது.


இத் தொகுதியில் 14.32 இலட்சம் வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர் அதில் 71.51 வீதம் பேர் வாக்களித்திருக்கின்றனர். மொத்தம் 28 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>