Spread the love

செய்தி அலசல்:

அமெரிக்க அரசியலில் எழுதாத சட்டம் ஒன்று எந்தவொரு ஜனாதிபதியும் அவருக்கு முந்திய ஜனாதிபதிகளைப் பகிரங்கமாக விமர்சிப்பதில்லை. ஆனால் தற்போதய ஜனாதிபதி ட்றம்பிற்கும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவிற்கும் இருக்கும் நீண்டநாட் பகையின் காரணமாக இந்த எழுதா வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

“கோவிட்-19 நோய்த் தொற்று நடவடிக்கைகளை ட்றம்ப் கையாண்ட விதம் மிகவும் அபாயகரமானது” என்ற கருத்தில் சமீபத்தில் ஒபாமா பேசியிருந்ததாக செய்திகள் வந்திருந்தன. இதில் உண்மையிருக்கிறதெனினும் அதை ஒபாமா சொன்னது வழக்கத்துக்கு மாறானது. ஏற்கெனவே ஒபாமா மீது கசப்பான உணர்வுகளைக் கொட்டிவரும் ட்றம்ப் அதற்கு இணையாக இன்னுமொரு ‘வழக்கத்துக்கு மாறான’ விடயத்தைச் செய்யவிருக்கிறார். வெள்ளை மாளிகையில் முந்திய ஜனாதிபதியின் உருவப்படத்தைத் தற்போதைய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் ‘வழக்கத்தை’ அவர் மீறப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதிகளின் வரலாற்றில், ட்றம்ப் போல் எவரும் நடந்துகொள்ளவில்லை. இது மட்டுமல்ல பல விடயங்களில் வரலாற்றையே புரட்டிப் போட்டு வருபவர் அவர். ஜனாதிபதிகளின் மரபை அவர் அனுசரிப்பதில்லை. ஜனாதிபதி அலுவலகத்துக்குரிய கெளரவத்தை அவர் நிலைநாட்ட முயற்சிப்பதேயில்லை. எனவே அவர் இப்படியான அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்பதையிட்டு எவரும் ஆச்சரியமடையத் தேவையில்லை.

ட்றப்ம் ஆட்சிக்கு வர முன்னரேயே ஒபாமாவின் பிறப்பு பற்றிச் சந்தேகித்தவர், பகிரங்கமாக நையாண்டி செய்தவர். பதிலுக்கு வெள்ளை மாளிகை ஒழுங்கு செய்த இராப்போசன நிகழ்வொன்றில் ஒபாமா ட்றம்பைப் பதிலுக்கு மிகவும் மோசமாக அவமானப்படுத்தியிருந்தார்.

தற்போது மிக முக்கிய உருவப்படத்தைத் திறக்க ட்றம்ப் மறுத்துள்ளமை உலகக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ட்றம்ப் ஒரு இனவாதி என்கின்ற தோரணையில் பல விமர்சனங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன. ட்றம்ப் ஒரு இனவாதி என்பதில் சந்தேகமில்லையெனினும் அவரது தேர்தல் கூட்டங்களில் பின்னால் நின்றுகொண்டு வெள்ளையரல்லாதோர் பதாகைகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் மட்டும் இந்த இனவாதக் கோசம் எடுபடுவது கஷ்டம்.

ஒபாமா தனது முந்திய ஜனாதிபதி எவரையும் விமர்சிக்கவில்லை என்பது உண்மையானாலும் ட்றம்பை விமர்சிப்பதன் மூலம் அவரும் சில எழுதாத விதிகளை மீறியிருக்கிறார் என்பதும் பார்க்கப்பட வேண்டும்.

-மாயமான்
Print Friendly, PDF & Email
Related:  பிரித்தானியா | புகலிடம் மறுக்கப்பட்டவர்களை வெளியேற்ற உள்ளக அமைச்சு உத்தரவு
வெள்ளை மாளிகையில், ஒபாமாவின் உருவப்படத்தைத் திறந்துவைக்க ட்றம்ப் மறுப்பு!
Then-President Obama and then-President-elect Donald Trump shake hands during a transition planning meeting in the Oval Office at the White House in November of 2016.

வெள்ளை மாளிகையில், ஒபாமாவின் உருவப்படத்தைத் திறந்துவைக்க ட்றம்ப் மறுப்பு!