வெளிநாட்டுப் பணியாளரை அவமானப்படுத்திய சவூதி அரம்கோ நிறுவனம்!

Spread the love
‘நடமாடும் சுத்திகரிப்பு நிலையமாக’ கடமையாற்றப் பணிக்கப்பட்டார்

உலகின் அதி பெரிய எண்ணை உற்பத்தி நிறுவனமான சவூதி அரம்கோ தனது பணியாளர் ஒருவரை நடமாடும் சுத்திகரிப்பு நிலையமாக வேடமிட்டது தொடர்பாக உலகெங்கும் சமூகவலைத்தளங்களில் எதிர்ப்புக் குரல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இப் பணியாளர் கைகளைச் சுத்தம் செய்யும் ‘சனிட்டைசர்’ நிலையமொன்றைத் தாங்கும் பெட்டியொன்றைக் கழுத்தில் தொங்கியபடி, முகக்கவசமும் அணிந்து பணியகத்தின் நிர்வாகப் பணியாளர்களிடம் சென்று ‘சேவை’ யை வழங்குவதுபோல் ஒரு படமொன்று சமூக வலைத் தளங்களில் வெளியாகியிருந்தது.

இதைப் பார்த்த பல ருவிட்டர் பாவனையாளர்கள் இது ஒரு இனவாதம் மிக்க செயல் எனக் கண்டனங்களை எழுப்பியதைத் தொடர்ந்து சவூதி அரம்கோ நிறுவனம் தாம் அச் செயலை உடனடியாக நிறுத்திவிட்டதாகவும், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்திருக்கிறது.


“இதை நடைமுறைப்படுத்தியவரின் மூளை சுத்திகரிக்கப்பட வேண்டுமென” ஒரு ருவிட்டர் பாவனையாளர் பதிவிட்டிருந்தார்.

இன்னுமொரு பதிவாளர் ” நிறுவனம் பகிரங்க மன்னிப்புக் கேட்பதை விட்டுவிட்டு, சம்பந்தப்பட்ட பணியாளரிடம் மன்னிப்புக் கேட்கவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார்.

Naser@NaserMestarihi

Slavery was never abolished here, just repackaged. https://twitter.com/hishamfageeh/status/1237406453175996417 …هشام فقيه@HishamFageehطبقية خليجية
اهداء من أرامكو
4,04512:28 PM – Mar 10, 2020Twitter Ads info and privacy1,485 people are talking about this

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>