விராட் கோலி சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை அதிவிரைவில் எடுத்த அணித் தலைவர் -

விராட் கோலி சாதனை: டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை அதிவிரைவில் எடுத்த அணித் தலைவர்

கொல்கத்தா, நவம்பர் 22, 2019

India captain Virat Kohli added another feather in his cap at Eden Gardens. (PTI Photo)
விராட் கோலி [படம்: பி.ரி.ஐ.]
  • ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டின் இந்திய அணித் தலைவராக 5000 ஓட்டங்களை அதி விரைவாக எடுத்துக் குவித்த சாதனை
  • 5000 ஓட்டங்களை, ஒரு அணித் தலைவராக 53 வது போட்டிகளிலேயே (86 இன்னிங்ஸ்) எடுத்த சாதனை (றிக்கி பொண்டிங் கின் முந்திய சாதனை 5000 ஓட்டங்களை 54 போட்டிகளில் (97 இன்னிங்ஸ்) பெற்றமை)

வெள்ளியன்று இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்குமிடையே நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணித் தலைவராக 5000 ஓட்டங்களை அதி வேகமாக எடுத்துக் குவித்து சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் விராட் கோலி. இப்படியான சாதனையைப் புரிந்தவர்களில் இவர் 6 வது இடத்தைப் பெறுகிறார்.

இந்தியாவுக்கும் வங்காளதெசத்துக்குமிடையே இரண்டு டெஸ்ட்-போட்டி நடைபெறுகிறது. இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பதாக, இச் சாதனையைப் புரிவதற்கு அவருக்கு 32 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில் இருந்தது.

இதற்கு முன் இச் சாதனையை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த றிக் பொண்டிங் வைத்திருந்தார். இந்த 5000 ஓட்டங்களைச் சேர்க்க அவருக்கு 54 போட்டிகள் (97 இன்னிங்குகள்) தேவைப்பாட்டிருந்தன.

கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் இல் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாளே கோலி பொண்டிங்கின் சாதனையை முறியடித்துவிட்டார். 53 டெஸ்ட் போட்டிகளிலேயே (86வது இன்னிங்கில்) கோலி 5000 ஓட்டங்களைப் பெற்றுவிட்டார்.

கோலி இன்னுமொரு சாதனையையும் செய்துள்ளார். ஒரு அணித் தலைவராக 5000 ஓட்டங்களைப் பெறும் முதலாவது இந்தியர் என்ற பெருமையும் அவரைச் சேர்கிறது. அத்தோடு, இந்த டெஸ்ட் போட்டிகளில் கோலி ‘செஞ்சுரிகள்’ அடிப்பாரானால் அதிக ‘செஞ்சுரிகளை’ அடித்த அணித் தலைவர்கள் வரிசையில் பொண்டிங்கின் சாதனையை முறியடித்துக்கு இரண்டாவது இடத்துக்கு வருவார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)