வியாழேந்திரனின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியால் சாரதி ஒருவர் சுட்டுக் கொலை

மட்டக்களப்பு மாவட்ட பா.உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்த்திரனின் வீட்டுக் காவல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவ் வீதியால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனச் சாரதி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

சமபவம் நடைபெற்ற போது வியாழேந்திரன் அவரது வீட்டில் இருந்திருக்கவில்லை.

உயிரிழந்தவருக்கும், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்குமிடையே ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததென்றும் அதன் காரணமாகவே இக் கொலை நடைபெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொலைக்குக் காரணமான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டதுடன் அவரது கைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஜஹண தெரிவித்துள்ளார்.