வியட்நாம் தமிழ் அகதிகள்: இறந்தவரின் உடலைத் தருவிக்க இலங்கை அரசு முயற்சி
வியட்நாமிய தற்காலிக அகதி முகாமில் மரணமடைந்தவரின் உடலைத் திருப்பி இலங்கைக்குத் தருவிக்கும் முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாகவும் இது குறித்து அது சர்வதேச குடிபெயர்வு அமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கப்பல் மூலம் கனடாவுக்கு வரவிருந்த 303 தமிழ் அகதிகள் பழுதடைந்த கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்டு வியட்நாம் நாட்டில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் இருவர் கிருமிநாசினியகற்றும் (hand sanitizer) பதார்த்தத்தை அருந்தியதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் அங்கு மரணமாகிவிட்டார் எனக் கூறப்படுகிறது. இறந்தவரின் உடலை இலங்கையிலிருக்கும் அவரது மனைவி இலங்கைக்கு எடுத்துத் தரும்படி கேட்டுள்ளதாகவும் அதற்கிணங்க அரசு இம்முனைப்பில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இறந்தவர் சிறுநீரக்ம் போன்ர முக்கிய உறுப்புகள் செயற்பாடாமையால் இறந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபை தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் இறந்தவர் தற்கொலை செய்துகொண்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனாலும் இலங்கைத் தூதுவர் மறுத்துள்ளார். உயிர் தப்பிய மற்றவரின் வாக்குமூலத்தின்படி கிருமிநாசினியைத் தண்ணீரில் கலந்து அவர்கள் அருந்தியதாகவும் அது தற்கொலை முயற்சிக்காக அல்லவெனவும் தூதுவர் கமகே தெரிவித்திருக்கிறார். சர்வதேச குடிபெயர்வு அமைப்பும் இச்செய்தியை மறுத்துள்ளது எனவும் உடலை இலங்கைக்கு அனுப்புவது என்பது மிகவும் பணச்செலவுடைய ஒரு விடயம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
இதே வேளை சில அகதிகள் இலங்கைக்குத் திரும்ப விரும்புவதாகவும் சிலர் தம்மை சர்வதேச குடிபெயர்வு அமைப்பு பாரமெடுக்கவேண்டுமென விரும்புவதாகவும் தெரிகிறது. இருப்பினும் இக்காரியங்கள்லை நிறவேற்ற சில காலம் பிடிக்குமென தூதுவர் கமகே தெரிவித்துள்ளார்.