Sri Lanka

வியட்நாமில் தஞ்சமடைந்த தமிழர்கள்: ஐ.நா. வின் குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) விசாரிக்கிறது

வியட்நாமில் தஞ்சமடைந்திருக்கும் 303 தமிழ் குடிபெயர்வாளர்கள் தொடர்பாக ஐ.நா. வின் அமைப்புக்களில் ஒன்றான குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (International Orgnaization for Migration (IOM)) விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது என வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் பிரசன்னா கமகே தெரிவித்திருக்கிறார்.

இலங்கையிலிருந்து புறப்பட்டதாகக் கருதப்படும் 303 தமிழ் குடிபெயர்வாளர்கள் மியன்மார் கொடியைத் தாங்கிய கப்பலொன்றில் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில் யப்பானிய சரக்குக் கப்பலொன்றினால் காப்பாற்றப்பட்டு வியட்நாமில் இறக்கிவிடப்பட்டனர். ‘லேடி R3’ எனப் பெயரிடப்பட்ட இக் கப்பல் நீர்க்கசிவுக்குள்ளாகியதாகவும் கப்பல் அமிழப்போகும் நிலையில் அதில் பயணம் செய்தவர்களைக் கைவிட்டுவிட்டு கப்பலின் மாலுமியும் பணியாளர்களும் சிறிய படகொன்றின் மூலம் தப்பியோடிவிட்டார்கள் எனவும் கூறப்படுகிறது. இலங்கைக் கடலெல்லையில் இருந்து 200 கடல் மைல்களுக்கு அப்பால் அலைந்துகொண்டிருந்த இக்கப்பலை சிங்கப்பூர் மீன்பிடிப்படகொன்று அடையாளம் கண்டு அறிவித்ததன் பேரில் அயலில் சென்றுகொண்டிருந்த யப்பானிய கப்பல் அவர்களைக் காப்பாற்றி வியட்நாமில் இறக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கைைவிடப்பட்ட நிலைையில் 28 நாாட்களாாகப் பயணம்செய்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலைையில் காாப்பாாற்றப்பட்ட 303 பேரக்கொண்ட இக்குழுவில் 20 குழந்தைகளும் 19 பெண்களும் அடங்குவர். இலங்கை தூதரக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்துக் குடிவரவாளர்களும் தென்வியட்நாமிய மாகாணமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மூன்று முகாம்களில் தங்கவைத்திருப்பதாக பயணிகளில் ஒருவரான வினோத் என்பவர் ‘தி ரமில் ஜேர்ணல்’ மற்றும் ‘மறுமொழி’ ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வியட்நாாமிய அதிகாரிகள் தம்மைைஇதுவரை நல்ல முறைையில் பராமரித்து வருவதாகவும் அதற்காான செலவுகளைை யாார் பொறுப்பேேற்கிறாார்கள் என்பது தங்களுக்குத் தெரியாாது எனவும் இலங்கை தூதரக அதிகாரிகள் இவ்விடயமாகப் பின்புலத்தில் பணியாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுமாார் 120 பேரைக்கொண்ட முகாமில் முதிய பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்படப் பலரும் திறந்த கூடமொன்றில் இருப்பதை வினோத் காணொளி மூலம் காண்பித்தார். கப்பலில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அசுத்தமான குடிநீரைத் தாம் பல தடவைகள் வடிகட்டிக் குடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஒருவர் வியட்நாமிய மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறவேண்டி ஏற்பட்டதாகவும் வினோத் தெரிவித்தார்.

Photo Courtesy: Dong Ha / Tuoi Tre

தாம் எந்த காரணம் கொண்டும் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல மாட்டோம் எனவும் தங்களை ஐ.நா. பொறுப்பேற்கவேண்டுமெனவும், இலங்கையைத் தவிர வேறெநத நாட்டிலும் வாழ்வதற்குத் தாம் தயாரெனவும் புகலிடக் கோரிக்கையினர் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். புலம் பெயர் தமிழர் அமைப்புகள் ஏதாவது தொடர்புகளை மேற்கொண்டு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளார்களா எனக் கேட்டபோது கனடா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய அமைப்புக்கள் உதவிகளைச் செய்வதாக வாக்களித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில் ஐ.நா.வின் குடிபெயர்வாளர்களுக்கான சர்வதேச அமைப்பு (IOM), இக்குடிபெயர்வாளர்களின் திரிசங்கு நிலைக்கு விடிவுகாண பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக அறியப்படுகிறது. சிங்கப்பூர், வியட்நாம், இலங்கை ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் ஆனாலும் இவர்கள் அனைவரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பும்படி இலங்கை வெளிவிவகார அமைச்சு சர்வதேசங்களை வற்புறுத்தி வருவதாகவும் அறியப்படுகிறது.

இதற்கு முன்னர் கனடாவுக்கு வந்த தமிழர் கப்பல்கள் தொடர்பாக அப்போதிருந்த ஹார்ப்பர் அரசு தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் தரித்து நிற்கும் தமிழ் அகதிகளை அந்நாடுகளுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பியிருந்தமை பலருக்கும் தெரிந்திருக்கும். அமைச்சர் ஜேசன் கெனி இதற்காக அந்நாடுகளுக்குச் சென்று முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் எனவும் அப்போது கூறப்பட்டது. இதன்போது ஐ.நா. சபையினால் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களைக் குடியமர்த்துவதற்கு பிற நாடுகளைத் தயார் செய்துகொண்டிருக்கும் நிலையில் இப்படிப் பதிவுசெய்யப்பட்டவர்களைத் திருப்பி அனுப்புவதில் ஹார்ப்பர் அரசு முன்னின்று உழைத்தது எனவும் கூறப்பட்டது. இதே போல் முந்தைய லிபரல் அரசுகளும் கடல் மூலம் வரும் அகதிகளை இடைமறித்துத் திருப்பி அனுப்பிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. வியட்நாம் புகலிடக் கோரிக்கையாளர் விடயத்தில் ட்றூடோ அரசின் நிலைப்பாடு பற்றி உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இலங்கையிலிருந்து இதர நாடுகளுக்குக் கடல் மூலம் தப்பியோடும் நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. அவுஸ்திரேலியா, நியூசீலந்து, இந்து சமுத்திரத் தீவுகள், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலர் இன்னும் முகாம்களில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவுஸ்திரேலிய அரசு இப்படியான கடற் பயணங்களைத் தடுப்பதற்காக இலங்கை அரசுடன் இணைந்து பெரும் பணச் செலவில் பதாகை விளம்பரங்களைச் செய்து வருகிறது. அவுஸ்திரேலியாக்குச் செல்ல முயற்சிக்கும் குடிவரவாளர்களை நடுக்கடலில் நிறுத்தித் திருப்பி அனுப்புவதற்காக இலங்கை கடற்படையுடன் அவுஸ்திரேலிய கடற்படையும் இணைந்து செயற்படுகிறது. சிறிய படகுகளில் சென்ற பலர் கடலில் மூழ்கி இறந்த சம்பவங்களும் உண்டு.

வியட்நாமிய தமிழ்க் குடிவரவாளர்கள் தொடர்பாக குடிவரவாளர்களுக்கான சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் விசாரணைகள் மூன்று வாரங்களுக்கு நடைபெறலாமெனவும் அது முடிவுற்றதும் அவர்களை எங்கு அனுப்புவது என்பது தீர்மானிக்கப்படுமெனவும் தூதுவர் கமகே தெரிவித்திருக்கிறார்.