விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்தது!

Spread the love

பிரஸெல்ஸ், ஜனவரி 13, 2020

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து இந்த வருடமும் விடுதலைப் புலிகளின் பெயர் அகற்றப்படவில்லை எனத் தெரியவருகிறது.

2001 இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்புச் சபியின் தீர்மானம் 1373 / 2001 இன் பிரகாரம், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட அமைப்புக்களயும், தனி மனிதர்களையும் பட்டியலிட்டு அவர்கள் மீது பலவிதமான தடைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்து வருகிறது. 2006 இல் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் அப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தற்போது, 21 அமைப்புகளினதும், 15 தனிமனிதர்களுடையதும் பெயர்கள் அப்பட்டியலிலுள்ளன. குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு தடவை அது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்போது சில அமைப்புகளினதும், தனி மனிதர்களினதும் பெயர்கள் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் வழக்கம். இந்த வருடம் அப் பட்டியல் பரிசீலனைக்கு வந்தபோது விடுதலைப் புலிகளைத் தொடர்ந்தும் அப்பட்டியலில் வைத்திருப்பதென ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கிறது.

இப் பட்டியலிலுள்ள அமைப்புகளின் அல்லது தனிமனிதர்களின் நிலைமைகளில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் அவற்றைப் பரிசீலித்து தடைகளைத் தளர்த்துவதோ அல்லது நீக்குவதோ வழக்கம். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அது 2009 இல் தோற்கடிக்கப்பட்டிருந்தும், சில ஐரோப்பிய நாடுகள், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் அதன் மீளுருவாக்கத்துக்காக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இத் தடைகளின் பிரகாரம், இப் பட்டியலிலுள்ள அமைப்புகளினதோ அல்லது தனிமனிதர்களினதோ சொத்துக்கள் முடக்கப்படுவது வழக்கம்.


 1. ABDOLLAHI Hamed (a.k.a. Mustafa Abdullahi), born in Iran.
 2. AL-NASSER, Abdelkarim Hussein Mohamed, born in Al Ihsa (Saudi Arabia), citizen of Saudi Arabia.
 3. AL YACOUB, Ibrahim Salih Mohammed, born in Tarut (Saudi Arabia), citizen of Saudi Arabia.
 4. ARBABSIAR Manssor (a.k.a. Mansour Arbabsiar), born in Iran. Iranian and US national.
 5. ASADI Assadollah, born in Teheran (Iran), Iranian national.
 6. BOUYERI, Mohammed (a.k.a. Abu ZUBAIR, a.k.a. SOBIAR, a.k.a. Abu ZOUBAIR), born in Amsterdam (The Netherlands).
 7. EL HAJJ, Hassan Hassan, born in Zaghdraiya, Sidon, Lebanon, Canadian citizen.
 8. HASHEMI MOGHADAM Saeid, born in Teheran (Iran), Iranian national.
 9. IZZ-AL-DIN, Hasan (a.k.a. GARBAYA, Ahmed, a.k.a. SA-ID, a.k.a. SALWWAN, Samir), born 1963 in Lebanon, citizen of Lebanon.
 10. MELIAD, Farah, born in Sydney (Australia), Australian citizen.
 11. MOHAMMED, Khalid Shaikh (a.k.a. ALI, Salem, a.k.a. BIN KHALID, Fahd Bin Adballah, a.k.a. HENIN, Ashraf Refaat Nabith, a.k.a. WADOOD, Khalid Adbul), born in Pakistan.
 12. ȘANLI, Dalokay (a.k.a. Sinan), born in Pülümür (Turkey).
 13. SHAHLAI Abdul Reza (a.k.a. Abdol Reza Shala’i, a.k.a. Abd-al Reza Shalai, a.k.a. Abdorreza Shahlai, a.k.a. Abdolreza Shahla’i, a.k.a. Abdul-Reza Shahlaee, a.k.a. Hajj Yusef, a.k.a. Haji Yusif, a.k.a. Hajji Yasir, a.k.a.Hajji Yusif, a.k.a. Yusuf Abu-al-Karkh), born in Iran. Addresses: (1) Kermanshah, Iran, (2) Mehran Military Base, Ilam Province, Iran.
 14. SHAKURI Ali Gholam, born in Tehran, Iran.
 15. SOLEIMANI Qasem (a.k.a. Ghasem Soleymani, a.k.a. Qasmi Sulayman, a.k.a. Qasem Soleymani, a.k.a. Qasem Solaimani, a.k.a. Qasem Salimani, a.k.a. Qasem Solemani, a.k.a. Qasem Sulaimani, a.k.a. Qasem Sulemani), born in Iran. Iranian national, Title: Major General.
 1. ‘Abu Nidal Organisation’ — ‘ANO’ (a.k.a. ‘Fatah Revolutionary Council’, a.k.a. ‘Arab Revolutionary Brigades’, a.k.a. ‘Black September’, a.k.a. ‘Revolutionary Organisation of Socialist Muslims’).
 2. ‘Al-Aqsa Martyrs’ Brigade’.
 3. ‘Al-Aqsa e.V’.
 4. ‘Babbar Khalsa
 5. ‘Communist Party of the Philippines’, including ‘New People’s Army’ — ‘NPA’, Philippines.
 6. ‘Directorate for Internal Security of the Iranian Ministry for Intelligence and Security’.
 7. ‘Gama’a al-Islamiyya’ (a.k.a. ‘Al-Gama’a al-Islamiyya’) (‘Islamic Group’ — ‘IG’).
 8. ‘İslami Büyük Doğu Akıncılar Cephesi’ — ‘IBDA-C’ (‘Great Islamic Eastern Warriors Front’).
 9. ‘Hamas’, including ‘Hamas-Izz al-Din al-Qassem’.
 10. ‘Hizballah Military Wing’ (a.k.a. ‘Hezbollah Military Wing’, a.k.a. ‘Hizbullah Military Wing’, a.k.a. ‘Hizbollah Military Wing’, a.k.a. ‘Hezballah Military Wing’, a.k.a. ‘Hisbollah Military Wing’, a.k.a. ‘Hizbu’llah Military Wing’ a.k.a. ‘Hizb Allah Military Wing’, a.k.a. ‘Jihad Council’ (and all units reporting to it, including the External Security Organisation))
 11. ‘Hizbul Mujahideen’ — ‘HM’.
 12. ‘Khalistan Zindabad Force’ — ‘KZF’.
 13. ‘Kurdistan Workers’ Party’ — ‘PKK’, (a.k.a. ‘KADEK’, a.k.a. ‘KONGRA-GEL’).
 14. ‘Liberation Tigers of Tamil Eelam’ — ‘LTTE’.
 15. ‘Ejército de Liberación Nacional’ (‘National Liberation Army’).
 16. ‘Palestinian Islamic Jihad’ — ‘PIJ’.
 17. ‘Popular Front for the Liberation of Palestine’ — ‘PFLP’.
 18. ‘Popular Front for the Liberation of Palestine — General Command’ (a.k.a. ‘PFLP — General Command’).
 19. ‘Devrimci Halk Kurtuluș Partisi-Cephesi’ — ‘DHKP/C’ (a.k.a. ‘Devrimci Sol’ (‘Revolutionary Left’), a.k.a. ‘Dev Sol’) (‘Revolutionary People’s Liberation Army/Front/Party’).
 20. ‘Sendero Luminoso’ — ‘SL’ (‘Shining Path’).
 21. ‘Teyrbazen Azadiya Kurdistan’ — ‘TAK’ (a.k.a. ‘Kurdistan Freedom Falcons’, a.k.a. ‘Kurdistan Freedom Hawks’).
Print Friendly, PDF & Email