விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் நால்வர் கைது!

Spread the love
பயங்கரவாத விசாரணைப் பிரிவு மீண்டும் களத்தில்!

டிசம்பர் 10, 2019

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் மூதூரிலும், சம்பூரிலும் இருந்து ஞாயிறன்று நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மூதூர், சம்பூர் காவற்துறைப் பிரிவுகளைச் சேர்ந்த கட்டைபறிச்சான் தெற்கு, மாஹல்சேனை, இறால்குழி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களென அறியப்படுகிறது.

அவர்களிடமிருந்து ஒரு T56 றைபிள், 2 மகசீன்கள், 61 தோட்டாக்கள், ஒரு கிளேமோர் கண்ணிவெடி, மூன்று கிரெனேட்டுகள், மூன்று வெடித் தூண்டிகள், 9 மி.மீ. துப்பாக்கிகளில் பாவிக்கக்கூடிய 31 ரவைகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும், மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் நால்வரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனரெனவும் அறியப்படுகிறது.

அரச புலனாய்வுத் துறையிடமிருந்து கிடைத்த தகவலை ஆதாரமாகக் கொண்டு அவர்கள் கைதுசெய்யப்பள்ளதாக அறியப்படுகிறது.

அதே வேளை “உங்கள் எல்லோருடைய பங்களிப்பினாலும் நாடு பயங்கரவாதத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், விடுதலைப் புலிகளின் கோட்பாடு இன்னமும் தொடர்கிறது என்றும் எதுவித தவறும் செய்யாத, இந்நாட்டை விடுவித்த போர்வீரர்கள் சிறைகளில் தள்ளப்பட்டுள்ளார்கள்” என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.

“ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, நாட்டினதும் மக்களதும் பாதுகாப்பு ஒன்றே எங்கள் தலையாய கடமை என நானும், ஜனாதிபதி, இராணுவத் தளபதி ஆகியோரும் தீர்மானித்துள்ளோம். எங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பாரிய சுமைகளைத் தாங்க இராணுவ வீரர்களாகிய நீங்கள் தயாராக இருக்க வேண்டும்” என சிறி ஜயவர்த்தனபுரவில் புதிதாகத் திறக்கப்பட்ட இராணுவ தலைமையகத்துக்குத் திங்களன்று சென்றிருந்தபோது பாதுகாப்புச் செயலாளர் இதைத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  தேர்தலைப் பின்போடும்படி த.தே.கூ. அரசாங்கத்திடம் கோரிக்கை

Leave a Reply

>/center>