விடுதலைப் புலிகளை மீளுருவாக்கப் பணமாற்றம் நடைபெற்றிருக்கிறது - மலேசிய காவல்துறை -

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கப் பணமாற்றம் நடைபெற்றிருக்கிறது – மலேசிய காவல்துறை

அக்டோபர் 13, 2019


மலேசியாவில் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்தின் பாவனைக்கென நம்பப்படும் வகையில் பெருந்தொகையான பணம் இடமாற்றம் பெற்றுள்ளது என அந்நாட்டின் காவல்துறை அறிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட சட்டசபை உறுப்பினர்கள்

அக்டோபர் 10 -12 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களெனச் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்தபோது பெருந்தொகையான பணமார்றங்கள் நடைபெற்றது தெரியவந்துள்ளதென இவ் விசாரணைகளுக்குப் பொறுப்பான புகிற் அமான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரி மைடின் பிச்சே தெரிவித்தார்.

இப் பணம் விடுதலைப் புலிகளின் பரப்புரை மற்றும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்வதற்கான காரணங்களுக்காகப் பாவிக்கப்படலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக அவர் புகிற் அமானில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கிளைகளை வைத்திருப்பதாகவும், மாற்றப்பட்ட பணத்தின் தொகையைக் கூறமுடியாதெனவும், அவ்வியக்கம் வளர்வதைத் தடுப்பதே இக் கைது நடவடிக்கைகளின் நோக்கமெனவும் அவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

” கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 2016 இல் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் சாஹிப் அன்சார் மீது தாக்குதலை மேற்ற்கொண்டவர்கள் எனவும் இது அரசியல் கட்சி சார்ந்த விடயமல்ல பயங்கரவாதம் தொடர்பான விடயம். இலங்கையின் சிறுபான்மைத் தமிழர் மீது அனுதாபம் தெரிவிப்பது குற்றமல்ல தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம். அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பது எங்களுக்குப் பொருட்டல்ல. விடுதலைப் புலிகளுக்குப் பணம் தந்து ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரும் எங்கள் கவனத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இரு சட்டசபை உறுப்பினர்களிடமிருந்து ஏன் வாக்குமூலங்கள் பெறப்படவில்லை எனக் கேட்டதற்கு ” இது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயம். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தால் அது ‘மேலோட்டமாகவே இருந்திருக்கும்’. ” எனத் தெரிவித்தார் அயூப் கான்.

இரண்டு சட்டசபை உறுப்பினர்களுட்பட 12 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு 2014 இல் மலேசியாவினால் பயங்கரவாத அமைப்பெனத் தடைசெய்யப்பட்டது

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  கடிமை: நேபாளத்தில் மஹாபலி ஆரம்பம்
error

Enjoy this blog? Please spread the word :)