Arts & Entertainment

விஜயானந்த்

விஜய் சங்கேஷ்வர் என்ற ஒரு கன்னட ஊடக அதிபர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை வெள்ளித் திரையில் ஒரு யதார்த்த வாழ்வியல் திரைப்படமாக ஆவணப்படுத்தி இரண்டுமணி நாற்பது நிமிட நேரத்தை சுவாரஸ்யமாக போக்க வைத்தது கன்னடமொழியில் தயாரிக்கப் பட்டு தமிழ் மொழி மாற்றம் பெற்ற “விஜயானந்த்”

அறுபதுகளின் இறுதிக் காலப் பகுதிகளில் ஆரம்பித்து இரண்டாயிர மாண்டு காலப்பகுதிகளில் நடைபெற்ற வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை, வாழ்வியலை, இயன்ற வரையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தி அந்தந்தக் காலப்பகுதிகளாக கண்முன்னே கொண்டு வந்து உணர வைத்துள்ளனர்.


முன்பின் அறிந்திராத பலதரப்பட்ட கன்னட குணசித்திர நடிகர்கள் கதா பாத்திரங்களாக திரையில் தோன்றி கதையுடன் ஒன்றிப்போக வைத்தாலும் அன்னியமாக காணப்படும் காட்சிகளில் இடையிடையே ராதாரவி அவர்களது பின்னணிக் குரல் கதையுடன் சற்று நெருங்கிப் போக வைக்கிறது.

தமிழ் தவிர்ந்த, மலையாளம், தெலுகு, கன்னடம் என மற்றய தென்னிந்திய மாநில திரைப்படங்களைப் பார்க்கும் இரசிகர்களின் இரசனைகள் மேலும் கெட்டு விடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் தொடர்ந்தும் “விஜயானந்” போன்ற தரமான திரைப்படங்களை தருகையில், தமிழ் இயக்குனர்கள், தமிழ் உச்ச நட்சத்திரங்கள் திரையரங்குகளில் காறித்துப்பும் இரத்த வாந்தி மசாலா குப்பைகளை, பணத்தை சுலபமாக இரசனை கெட்ட முட்டாள் தமிழ் இரசிகர் களிடம் சுருட்டுவதற்காக தொடர்ந்தும் திரையரங்குகளில் கொட்டுகிறார்கள்.

அடுத்து தமிழ் சினிமா ஊடகங்களும் இரசனை கெட்ட இரசிகர்களும் நடிகர் அஜித்தின் “நல்லது”, “கெட்டது” “கோரமானது” என்ற இன்னுமொரு கசாப்பு கடை எப்பவடா திறக்கும் என்று வாய் பிளந்து காத்திருக்கிறார்கள்.

அவமானம்!

“விஜயானந்” திரைப்படத்தை தந்திருக்கும் பெண் இயக்குனர் ரிஷிகா ஷர்மா அவர்கள் அணியும் பாத அணிகளை தலையில் காவுவதற்கே தகுதியற்றவர்கள் இந்த கேவலமான தமிழ் கசாப்புக்கடை திரைப்பட “யக்குனர்கள்”.

“விஜயானந்” திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துகள்!