Spread the love

வாக்கு எண்ணும் முறைமை பற்றி கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் - தேர்தல் கண்காணிப்பு மையம் 1

“தேர்தல்களின்போது வாக்குகள் எண்ணப்படும் முறை எப்படியென்பதைக் கட்சித் தலைவர்கள் தமது வேட்பாளர்களுக்குக் கற்பிக்க வேண்டும்” என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயக்கா, ‘தி ஐலண்ட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வியாழனன்று யாழ். மத்திய கல்லூரியில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமக்கு வரவேண்டிய விருப்பு வாக்குகளில் குளறுபடி செய்தமையினால் சசிகலாவின் பாராளுமன்றப் பதவி பறிபோய்விட்டதாக அவரின் ஆதரவாளர்கள் சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரைக் குற்றம்சாட்டியிருந்தனர்.

“மதியம் முதல், தேர்தல் நிலையத்துக்கு வெளியே வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் கூடிக்கொண்டிருந்ததை எமது கண்காளிப்பாளர்கள் அவதானிதார்கள். அப்போது விருப்பு வாக்குகள் பற்றிய தரவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. விருப்பு வாக்குகள் கிடைத்து அது அறிவிக்கப்பட்டபோது ரவிராஜ் தோல்வியைத் தழுவியிருந்தார். ஆனாலும் ரவிராஜ், தான் இரண்டாவது நிலையில் இருந்ததாக எண்ணிக்கொண்டிருந்தார். அவருடைய ஆதரவாளர்களும் அதையேதான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ரவிராஜின் மகளினதும், வேறு சிலரினதும் முகநூல் பதிவுகளில் “ஏதோ மர்மமான செயற்பாடுகள் பின்னணியில் நடிபெற்றிருக்கிறது” எனச் செய்தி வெளிவந்ததும், அவரது ஆதரவாளர் கோபம் கொண்டனர்” எகிறார் கஜநாயக்கா.அப்போது சுமந்திரன் நிலையத்துக்குத் தனது பாதுகாவலருடன் வந்திருந்தார். இதஹ்னால் மேலும் ஆத்திரமடைந்த நிலையில் பல்வேறுபட்ட வேட்பாளர்களினிடையே மோதல்கள் ஏற்பட்டது. அப்போது பொலிசாரும், அதிரடிப் படையினரும் ஆயுதங்களை வாகனங்களில் வைத்துவிட்டு அவ்விடத்துக்கு வந்தனர். பிரச்சினையைப் பெரிதாக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது.

இறுதியில், பொலிசாரும், அதிரடிப்படையினரும், மோதலில் ஈடுபட்ட ஆதரவாளர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சேனாதிராஜாவின் மகனும், ரவிராஜின் மகனும் இதில் காயப்பட்டிருந்தார்கள்.

வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும், தேர்தல் வாக்குகள் எண்ணப்படும் முறைமை குறித்த புரிதல் போதாமையே இச் சம்பவத்துக்குக் காரணம். அவர்களின் அறியாமையோடு சமூக வலைத் தளங்களும் இணைந்தமை மிகவும் ஆபத்தானதொரு கூட்டாகிவிட்டது என கஜநாயக்கா மேலும் தெரிவித்தார்.

“வாக்குகள் எண்ணப்படுதல் தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு விடயம். எங்கள் கண்காணிப்பாளர்கள் சகல பத்திரங்களையும் ஒழுங்காகப் பரிசோதனை செய்திருந்தார்கள். எல்லாமே ஒழுங்காக இருந்தன. வாக்கு எண்ணுதலின் இறுதிக்கணங்களை அடையும்போதுதான் ஒரு வேட்பாளர் எத்தனை வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பதை அறிய முடியும். இலஙகைத் தமிழரசுக் கட்சியில் பல பங்காளிக் கட்சிகள் உள்ளன. அவற்றினிடையே இருந்த பிரச்சினைகளும் இச் சம்பவத்துக்கு வழிவகுத்திருக்கலாம். ரவிராஜ், தனது பாராளுமன்ற ஆசனம் முறைகேடாகப் பறிக்கப்பட்டிருக்கிறது என நம்பினால் நீதிமன்றத்துக்குச் சென்று நியாயத்தைக் கோரலாம்” எனக் கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.

Related:  தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் பதவி விலகினார்

வெள்ளியன்று, ரவிராஜின் மகள், பிரவீணா ரவிராஜ், தனது முகநூலில், சுமந்திரனும், த.தே.கூட்டாமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுமே தனது தாயாரின் பாராளுமன்ற ஆசனம் பறிபோனதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார். அத்தோடு அதிர்டைப்படையிநரை ஏவித் தனது ஆரதரவாளர்களைத் தாக்கியமைக்குச் சுமந்திரனே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

“நாங்கள் கசப்பாகத் தோல்வியுற்றவர்களில்லை. ஆனால் வென்ற ஒருவர் எப்படித் தோல்வியுறலாம்?. கொழும்பிலும், வெளிநாடுகளிலுமிருந்து எங்களைப் பாராட்டியவர்களுக்கு நேற்றிரவு என்ன நடைபெற்றதென்றே தெரியாது. கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களில் கேட்ட த.தே.கூட்டமைப்பின்வேட்பாளர்களில், 2ம் இடத்திலிருந்த எனது தாயார் 4ம் இடத்துக்கு இறக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில், நான் நினைக்கிறேன், சுமந்திரனுக்காவே வாக்குகள் தாமதப்படுத்தப்பட்டன. இரண்டு சாவடிகளில் வாக்குகள் எண்ணப்படுவதில் செய்யப்பட்ட குளறுபடிகளை மறைக்கவே குழப்பம் விளைவிக்கப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களைச் சுமந்திரனது அதிரடிப்படை கற்கள் போன்றவற்றால் தாக்கியது.“எனவே, எங்கள் குடும்பத்தவர், நண்பர்களை மட்டுமல்லாது இதர கட்சிக்காரர்களையும் தாக்கிக் காயப்படுதியமைக்காக நான் சுமந்திரனுக்கும், அதிரடிப்படையினருக்கும் “நன்றி” கூறுகிறேன். தன்கள் சொந்த தோட்டத்திலேயே பாம்பொன்றை வளரவிட்டதற்காக நான் த.தே.கூட்டமைப்பிற்கும் “நன்றி” கூறுகிறேன்” என பிரவீணா ரவிராஜ் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா, முன்னாள் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவியாவார். ரவிராஜும் அவரது பொலிஸ் பாதுகாவலரும் 2006ம் ஆண்டு கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள்.

மூலம்: ‘தி ஐலண்ட்’ / ரதிந்திரா குருவித்த

Print Friendly, PDF & Email
வாக்கு எண்ணும் முறைமை பற்றி கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் – தேர்தல் கண்காணிப்பு மையம்

வாக்கு எண்ணும் முறைமை பற்றி கட்சித் தலைவர்கள் வேட்பாளர்களுக்கு கற்பிக்க வேண்டும் – தேர்தல் கண்காணிப்பு மையம்