வவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கான புதிய படுக்கை வசதி

வவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கான புதிய படுக்கை வசதி

Spread the love

வவுனியா மருத்துவ மனையில் விபத்து நோயாளர்களுக்கெனத் தனியான படுக்கை வசதிகளைக் கொண்ட கட்டிடமொன்று விரைவில் அமையவிருக்கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நோர்வேயின் உதவி தூதுவர் திருமதி. ஈவா வேர்செம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வைத் தொடர்ந்து பிரதமர் பேசும்போது, “வடக்கு மக்கள் தங்கள் கெளரவத்தைப் பாதுகாத்தவர்களையும், கடந்த நான்கு வருடங்களில் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்தவர்களையும் தெரிவு செய்ய வேண்டும். வவுனியாவிற்கு மட்டும் 20.5 பில்லியன் ரூபாய்களை நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம். முந்திய ஆட்சியினர் 5 வருடங்கள் ஆட்சிபுரிந்திருந்தாலும் அவர்கள் வடக்கை முற்றாகப் புறக்கணித்திருந்தார்கள்” எனத் தெரிவித்தார்.

 

Print Friendly, PDF & Email