200 வருட பழமை வாய்ந்த, பிரித்தானிய ஆடசியின்போது ஆரம்பிக்கப்பட் ட கல்முனை வைத்தியசாலை 1973 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலை எனத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது 403 படுக்கைகளைகே கொண்டியங்கும் இவ் வைத்தியசாலை அம்பாறை மாவட்ட மக்களுக்குப் பெரிதும் பயனளித்துவருகின்றது.
கொரோனாத் தொற்றுக்கு காலத்தில் விசேட கொரோனா நோயாளிப் பராமரிப்பு வசதிகளுடன் புனரமைக்கப்படட இவ் வைத்தியசாலையில் மருத்துவப் பணியாளர்களும், பல தொண்டர்கழும் தமது உயிராபத்தையும் பாராது இரவு பகலாக அர்ப்பணிப்போடு கடமையாற்றி வருவது பெருமை தருவது. கொரோனா நோயாளிகளின் சிகிசைக்காக 40 கட்டில்களைக் கொண்ட விசேட பிரிவொன்று இங்கு இயங்குகின்றது.
வைத்திய அத்தியட்சகர் டாகடர் முரளிதரனின் நிர்வாகத்தில் இவ் வைத்தியசாலை இயங்குகிறது.