Spread the love

ஆகஸ்ட் 30, 2020: வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று, இலங்கையில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு கொழும்பிலுள்ள சர்வதேச பிரதானிகள் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படுவதை நிறுத்துவது மட்டும் போதாது, அப்படிக் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய பதில்களைக் கொடுக்க வேண்டும். காணாமற்போனவர்களுக்கானவர்களுக்கான அலுவலகம் இக் குடும்பங்களுக்கு வழங்கும் பணிகள் இன்று மட்டுமல்ல, வரப்போகும் பல தலைமுறைகளுக்கு மிக முக்கியமானது.

அலெய்னா பி. ரெப்ளிட்ஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது ருவீட் செய்தியில்

போரின்போது காணாமற்போன ஆயிரக்கணக்கானவர்களின் குடும்பங்கள் இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றன. காணமலாக்கப்பட்டோர் பலர் அவர்களது குடும்பங்களின் முன்னிலையிலேயே பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்திருந்தனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவெனப் போராடிக்கொண்டிருப்பவர்கள் தமது முயற்சியைத் தொடரவேண்டுமென இலங்கையிலுள்ள ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தனது ருவீட் செய்தி மூலம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இலங்கையின் சகல சமூகங்களிலுமிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களோடு நான் இணைந்து கொள்கிறேன். இக் குடும்பங்கள் ஆற்ற முடியாத மன உளைச்சலுக்குள்ளாக்கப்படுள்ளனர். எனவே அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள் தமது பணிகளைத் தொடர்வது இன்றியமையாதது” என அவர் தனது ருவீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. ரெப்ளிட்ஸ் தனது ருவீட் செய்தியில் ” வலிந்து காணாமலாக்கப்படுவதை நிறுத்துவது மட்டும் போதாது, அப்படிக் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய பதில்களைக் கொடுக்க வேண்டும். காணாமற்போனவர்களுக்கானவர்களுக்கான அலுவலகம் இக் குடும்பங்களுக்கு வழங்கும் பணிகள் இன்று மட்டுமல்ல, வரப்போகும் பல தலைமுறைகளுக்கு முக்கியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



இலங்கைக்கான பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட தனது ருவீட்டில், “வலிந்து காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூரும் தினமான இன்று, இவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான பதில்களை எதிர்பார்த்து வருந்தும் குடும்பத்தினரையும், பாசம் கொண்டவர்களையும், அவர்களுக்கான நீதியையும், நிறைவையும் பெற்றுக்கொடுக்கவென உழைத்துவருபவர்களையும் நாம் மனதில் இருத்திக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான கனடிய தூதுவரகம் வெளியிட்ட ருவீட்டில்,”பல தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள், எவரும் தண்டிக்கப்படாமை காரணமாக பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் தம் நேசத்துக்குரியவர்களுக்கு என்ன நடந்தது எனத் தெரியாமால் அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் சர்வதேச தினமான இன்று எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இக்குடும்பங்களைச் சார்ந்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

Print Friendly, PDF & Email
Related:  பிரித்தானியா | புகலிடம் மறுக்கப்பட்டவர்களை வெளியேற்ற உள்ளக அமைச்சு உத்தரவு
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் | குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இலங்கையிலுள்ள தூதுவர் சமூகம்!
வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் | குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இலங்கையிலுள்ள தூதுவர் சமூகம்!