ColumnsWorld History

வரலாறு: இஸ்ரேலியர்கள் யூதர்களல்லர்

பாலஸ்தீனியர் மீது இஸ்ரேலியர்கள் இழைத்துவரும் கொடுமைகள் உலகையே உறைய வைத்துவருகின்றன. இதற்கு காரணம் அவர்கள் கைகளில் இருக்கும் பண, ஊடக, சட்ட அதிகாரங்கள் என்பவை எல்லோருக்கும் தெரிந்த விடயம். உலகை ஆள்வதற்காக அவர்கள் இந்த அதிகாரங்களைப் பாவித்து வருகிறார்கள் என்பதும் இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மை. குழதைகளைக் கொன்றுவிட்டு அதைப்பற்றி பெருமைப்படுமளவுக்கு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எப்படி இம்மனநிலை வந்தது என்பதைச் சற்று ஆராய்ந்தேன். வரலாறு மேலும் புதிர்களால் மூடிவிட்டது. படித்தவற்றில் சில:

இஸ்ரேலிய-பாலஸ்தீனப் போரில் சில யூதர்கள் இஸ்ரேலுக்காகக் கொலை செய்கிறார்கள், சிலர் வெளிநாடுகளில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள். இதனால் யூதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என ஒருவர் நம்பலாம். ஆனால் அது முற்றிலும் உண்மையானதல்ல.

இஸ்ரேலில் இரண்டுவகையானவர்கள் வாழ்கிறார்கள். ஒரு கூட்டத்தை ‘சயோனிஸ்ட்டுகள்’ எனவும் மற்றவர்களை ‘யூதர்கள்’ என்றும் அழைக்கிறார்கள். இவர்கள் அனைவருமே யூதர்கள் தானே எனவே நாம் நம்பிவந்தோம். வரலாறு அதைவிடச் சிக்கலானது.

இஸ்ரேல் ஆரம்பமானது 1948 இல். அப்போதைய பிரித்தானிய அரசின் உள்ளக அமைச்சருடன் ஐரோப்பிய செல்வந்தரும் யூதருமான றொக்கெஃபெல்லர் பேசியதைத் தொடர்ந்து அமைச்சர் உருவாக்கிய 67 சொற்களைக் கொண்ட ‘பல்ஃபோர்’ ஒப்பந்தமே இஸ்ரேலை உருவாக்கியது. அப்போது பாலஸ்தீனத்திலிருந்த 750,000 பாலஸ்தீனிய மக்களை அப்புறப்படுத்திவிட்டு 85,000 ‘யூதர்கள்’ அங்கு குடியேற்றப்பட்டனர். இவர்கள் எல்லோரும் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதியானவர்கள். இவர்கள் தம்மைத் தாமே ‘சயோனிஸ்ட்டுகள்’ என அழைக்கிறார்கள்.

“கடவுளால் எமக்கென்று தரப்பட்ட நிலத்தில் குடியேறிவிட்டோம் என அவர்கள் ‘யூத’ அட்டையைக் காட்டி, பாலஸ்தீனியர்களை எதிரிகளாகக் காட்டி உலகம் முழுவதிலும் பரந்து வாழ்ந்த யூதர்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தையும் பெற்று இஸ்ரேலை உருவாக்கியிருந்தார்கள். ஆனால் உண்மையான யூதர்கள் தாமே எனக்கூறும் ‘ஹசிடிக்’ யூதர்கள் பலர் இந்த சயோனிஸ்டுகளின் நடவடிக்கைகளை அப்போதே எதிர்த்துவந்தனர். இவர்களில் பலர் ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளில் வாழ்ந்தவர்கள். எகிப்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்களின் சந்ததிகள் இவர்கள். ஆபிரகாமின் குழந்தைகளான இவர்கள் தமது ஒன்றுவிட்ட சகோதர்களான அரபுக்களை வெறுப்பவர்களல்லர். ஆனால் சயோனிஸ்டுகளை இவர்களுக்குப் பிடிக்காது.

நீண்ட காலத்திற்கு முன்னர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் செனட்டராக இருந்தபோது ‘நான் ஒரு சயோனிஸ்ட்’ என்று பிரகடனம் செய்திருந்தார். இவர் ஐரிஷ் பூர்வீகத்தைக் கொண்டவர். “சயோனிஸ்ட் கட்டாயமாக யூதராக இருக்கவேண்டியதில்லை என எனது அப்பா கூறினார்” என்றொரு கூட்டத்தில் அவர் பேசியது பதிவிலிருக்கிறது. ஒபாமா நிர்வாகத்தில் அவர் உப-ஜனாதிபதியாக வந்தது தற்செயலான விடயமல்ல. அவர் ஒரு சயோனிஸ்ட்டாகவே அங்கு நிறுத்தப்பட்டார். பைடனைப் போலவே பல வெள்ளை ஐரோப்பியர்களும் தம்மை சயோனிஸ்ட்டுகள் எனப் பிரகடனம் செய்திருக்கிறார்கள். இவர்களது தேர்தல் அல்லது அதிகாரத் தேவைகளுக்கு சயோனிஸ்ட்டுகளின் பண, அதிகார உதவிகள் தேவை என்பதால் இக்கூட்டத்தில் அவர்கள் நுழைந்துகொள்கிறார்கள்.

வரலாற்றுத் துண்டுகளை வாசித்த போது சில விடயங்கள் அகப்பட்டன. இஸ்ரேலியர்கள் மரபணுப் பரிசோதனைகள் செய்வது சட்டப்படி தடுக்கப்பட்டிருக்கிறது எனபது அதிலொன்று. காரணம் என்னவாக இருக்கலாம் என்று குழம்பிக்கொண்டிருந்தேன். கடவுளால் தேர்வு செய்யப்பட்ட ஒரு தனித்துவமான இனம் தனது தனித்துவத்தைப் பேணுவதற்கு விழையாதா? அதற்கு மரபணுப் பரிசோதனைகள் தேவையில்லையா?. குழப்பமாக இருந்தது. இந்த வேளையில் இன்று X இல் வந்து விழுந்தது பதில்.

டாக்டர் அரியெல்லா ஒப்பன்ஹாய்ம் ஜெருசலேமிலுள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலியர்களிலும் பாலஸ்தீனியர்களிலும் 2001 இல் ஒரு மரபணுப் பரிசோதனையைச் செய்தார். இதன் பெறுபேறாக கப்பல்கள் ஐரோப்பிய ‘யூதர்களை’ ஏற்றிக்கொண்டு இஸ்ரேலை அடைவதற்கு முதல் அங்கு வாழ்ந்தவர்கள் 40% மானோர் மொங்கோலிய இனத்தவரும் 40% த்தவர் துருக்கிய இனததவருமாவர். பைபிளின் வரலாற்றுக்காலத்தில் 4000 வருடங்களுக்கு முன்னர் ஜெருசலேமில் செமெட்டிக் என்ற இனமே வாழ்ந்திருக்கவில்லை என அவர் நிரூபித்திருக்கிறார். இதே விடயத்தை 2012 இல் அமெரிக்க ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் இரான் எல்ஹைய்க் என்பவரும் நிரூபித்திருக்கிறார். டாக்டர் எல்ஹைய்க்கின் கருத்துப்படி அஸ்கிநாசி எனப்படும் யூதர்கள் மத்திய கிழக்கிலிருந்து குடிபெயரவே இல்லை எனவும் அங்கு வாழும் பாலஸ்தீனியர்களின் இரத்தம் 80% செமெட்டிக் (ஆபிரகாமின் பரம்பரை) வகையானது எனவும் இவர்களே உண்மையான இஸ்ரேலியர்கள் எனவும் அவர் நிறுவுகிறார்.

அவரது கருத்துப்படி இஸ்ரேல் என்று பெயரிடப்படுவதற்கு முன்னர் 1882 இல் பாலஸ்தீனத்திற்கு கப்பல்களில் வந்தவர்கள் இஸ்ரேலியர்கள் அல்லர். இவர்கள் அனைவரும் ஜேர்மானிய, ரஸ்ய, போலிஷ், அவுஸ்திரிய, ஜோர்ஜிய போன்ற நாடுகளிலிருந்து புறப்பட்ட ‘வெள்ளையர்கள்’. இவர்களே ‘தாம் கடவுளின் குழந்தைகள்’ எனப் பித்தலாட்டம் செய்பவர்கள். இவர்கள் அனைவரும் கசார்ஸ் (Khazars) எனப்படும் இநக்குழுமத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் தான் அவர்கள் தம்மை சயோனிஸ்ட்டுகள் என அழைத்துக்கொண்டு மரபணுப் பரிசோதனைகளை மறுத்து வருகிறார்கள். இதனால் தான் உண்மையான செமெட்டிக் யூதர்கள் இந்த சயோனிஸ்டுகளை எதிர்க்கிறார்கள்.

அரசியல் காரணங்களுக்காக மத்திய கிழக்கில் தமது காலனி ஒன்றை உருவாக்கி அதற்கு பணத்தையும் ஆயுதங்களைம் அள்ளி இறைப்பதன் மூலம் உண்மையான செமெட்டிக் இன மக்களையும் அவர்கள் வாழும் நாடுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. அல்லாது போனால் அவர்கள் மீண்டும் தமது நாடுகளுக்குள் புகுந்து தமது நாடுகளை நாசம் செய்துவிடுவார்கள் என்ற அச்சம் இந்நாடுகளுக்கு இருக்கின்றது. இதனால் தான் ஹிட்லர், ஸ்பானிய அரசி போன்றோர் இவர்கள் மீது கடும் தண்டனைகளை விதித்தனர்.

இது பொறுக்கியெடுத்த சில வரலாற்றுத் துண்டுகளை வெட்டி ஒட்டிச் செய்யப்பட்டது. முற்றாக நம்பவேண்டியதில்லை. மேலும் தேடல்களுக்கு இது உதவலாம். (Image source X, @IamKenSahib)