வரலாறு | இலங்கையில் ஆபிரிக்கர்
ஆபிரிக்க இலங்கையர்கள் என அழைக்கப்படும் ஒரு மிகச் சிறிய இனக்குழுமம் இலங்கையில் வசிக்கிறது. ‘காப்பிரிகள்’ (Kaffirs) என அழைக்கப்படும் இவர்கள் போர்த்துக்கீசரால் கூலிப்படையினராகவும், இசைக்கலைஞர்களாகவும், தொழிலாளர்களாகவும் பணியாற்றவெனக் கொண்டுவரப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. சுமார் 1,000 பேர்களைக் கொண்ட இக் குழுமம் சிறு சிறு பிரிவுகளாக திருகோணமலை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் சிலர் ஆரம்பத்தில் முஸ்லிம்களாக இருந்தனர் எனவும் பெரும்பாலானோர் ஆபிரிக்க மதங்களைப் பின்பற்றி வந்தனரெனவும் காலவோட்டத்தில் அனைவ்ரும் கத்தோலிக்க, புத்த மதங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர் எனவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இவர்கள் பேசும் மொழி ஆபிரிக்க கிறியோல் கலந்த தமிழ் அல்லது சிங்கள மொழியாக இருக்கிறது.
காபிர் என்னும் பதம் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் அவமதிக்கும் வார்த்தையாகப் பாவிக்கப்பட்டது. ஆனாலும் சங்க இலக்கியங்களில் “ஈழத்துணவும் காழகத்தாக்கமும், ஆபிரிக்கத்துக் காப்பிரி நாட்டிலும்” என்ற வரிகளில் காப்பிரி என்ற சொல் ஆபிரிக்கர்களைக் குறிக்கும் சொல்லாகப் பாவன பெற்றுள்ளது.
இலங்கையில் தற்போது வாழும் ஆபிரிக்கர்களைப் பற்றிய விவரணப் படமொன்று இங்கு இணைக்கப்படுகிறது.
இங்கு தரப்பட்ட தகவல்கள் சில விக்கிபீடியாவில் இருந்து பெறப்பட்டவை. மேலதிக சான்றுகள், ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் அனுப்பினால் இணைத்துக்கொள்வோம் (editor@marumoli.com).