BusinessNewsSri Lanka

வனிதாபிமானம்-2021



மனிதாபிமான சேவைகளில் ஈடுபடும் பெண்களைத் தேர்வுசெய்யும் போட்டி அடுத்த வாரம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் நடைபெறும் ‘வனிதாபிமானி -2021’ போட்டிகளுக்கான சப்ரகமுவ மாகாண நிகழ்வு நேற்று (04) நடைபெற்றது.

இலங்கையிலுள்ள பெண்களை வலுப்படுத்தும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊக்குவிக்கும் திட்டத்தில் தொழில் முயற்சி, இளம் தலைமைத்துவம், தொண்டாற்றல், கல்வி, விளையாட்டு, சூழல் முகாமைத்துவம் உள்ளிட்ட 10 துறைகளில் முன்னணி வகுக்கும் பெண்கள் பங்கெடுக்க அழைக்கப்படுகிறார்கள்.

‘நியூஸ் ஃபெர்ஸ்ட்’ ஊடகம் மற்றும் NDB வங்கியின் ஆதரவில் ஒழுங்குசெய்யப்பட்ட இந் நிகழ்வு இரத்தினபுரியிலுள்ள கீதுமதி ஓட்டலில் நடைபெற்றது.

ஒவ்வொரு மாகாணத்திலும் துறைக்கொருவராகப் 10 போட்டியாளர் தெரிவுசெய்யப்பட்டுப் பின்னர் தேசிய ரீதியிலான ‘வனிதாபிமானி 2021’ போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான பயிற்சிகளையும் தகவல்களையும் தொழிற் பயிற்சிக் கல்வி நிறுவனம் (Vocational Training Institute) அளிக்கிறது.