வட மாகாண ஆளுநராக P.S.M சார்ள்ஸ் நியமனம்

Spread the love

டிசம்பர் 30, 2019

வட மாகாணத்தின் ஆளுநராக திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று (30) ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை நிர்வாக சபையின் விசேட தர அதிகாரியாவார். 28 வருட அரச உத்தியோகத்தில் இவர் வவுனியாவிலும் பின்னர் மட்டக்களப்பிலும் முறையே மேலதிக அரசாங்க அதிபராகவும், அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

இதற் முன் இவர், புதிய அரசாங்கத்தில் சுகாதார அமைச்சின் செயலாளராகவும், முந்திய அரசாங்கத்தில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியற்றியிருக்கிறார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் பேராதனை மற்றும் ராஜரட்டை பல்கலைக்கழகங்களில் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>