வட-கிழக்கில் காணிகள் விடுவிப்பதைத் துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி உத்தரவு -

வட-கிழக்கில் காணிகள் விடுவிப்பதைத் துரிதப்படுத்தும்படி ஜனாதிபதி உத்தரவு

 கொழும்பு, ஆகஸ்ட் 28,2019

தேசிய பாதுகாப்புக்குக்குத் தீங்கு விளைவிக்காத வகையில், வட-கிழக்கில் இராணுவத்தினர் வசம் இருக்கும் காணிகளை உரிய சொந்தக்கார்களிடம் திருப்பியளிக்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவை வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

இராணுவத்தின்ரிடமிருக்கும் காணிகள்

ஜனாதிபதிக்கும் அரசாங்க அதிகாரிகளுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இக் கட்டளைகளைப் பிறப்பித்தார்.

வடக்கில் இராணுவத்திடமிருந்த காணிகளை தனியார் மற்றும் அரச காணிகளைஅவற்றின் உரிய சொந்தக்காரருக்குத் திருப்பிக் கொடுக்கும் பணிகளை கடைசி 5 வருடங்களாக நாம் செய்துவருகிறோம் என்று கூறிய ஜனாதிபதி எதிர் வரும் அக்டோபர் 1ம் திகதிக்கு முன்னர் இது பற்றிய அறிக்கையை வட மாகண ஆளுனரிடம் கையளிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்புக்கு இராணுவ முகாம்கள் அவசியம் என்பதைச் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சமீபத்தய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இதை வலுவாக நிரூபித்துள்ளன என ஜனாதிபதி மேலும் கூறினார்.

பாதுகாப்புப் படைகளுக்கு காணிகள் தேவைப்படும் பட்சத்தில் அவர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்கும்படியும் ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளார்.

இதுவரையில் இராணுவத்தினர் வசமிருந்த 80.98 வீதம் அரச காணிகளும், 90.73 வீதம் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் இச் சந்திப்பின்போது கூறியது.

வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன், மாவை சேனாதிராஜா உட்பட்ட சில தமிழர் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செயலாளர் அனுரா ஆர். செனிவிரத்ன, ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலாளர் நாயகம் ஷாந்தா கொட்டேகொட ஆயுததப் படைகளின் கட்டளைத் தளபதி, பாதுகாப்பு அதிகாரிகளின் தலைவர் மற்றும் இதர அதிகாரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:
error
Related:  35 ராஜாங்க அமைச்சர்களும் 3 உதவி அமைச்சர்களும் நியமனம். தமிழ், முஸ்லிம்கள் புறக்கணிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)