வட-கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (UPFA) யாகக் களமிறங்கும் ராஜபக்ச தரப்பு!

Spread the love
கட்சியில் மீண்டும் இணையும்படி சந்திரிகாவிற்கு அழைப்பு!

பெப்ரவரி 18, 2020

சிறீலங்கா சுதந்திரக் கட்சி – சிறீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையேயான கூட்டணி, அடுத்த தேர்தலில், வட கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி என்ற பழைய பெயரிலேயே போட்டியிடலாமெனத் தெரிகிறது.

இது தொடர்பாக இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை எனினும், இப்படியான யோசனையைக் கட்சித் தலைவர்கள் ஆலோசிக்கின்றனர் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரா தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணி ஒவ்வொரு மாகாணாத்திலும் எப்படியான அணுகுமுறைகளைக் கையாளலாம் என்பது பற்றிய கருத்தாடல்கள் கட்சித் தலைவர்களிடையே நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், அதே வேளை, நாட்டின் பெரும்பாலான பாகங்களில் ‘நிதாஹாஸ் பொதுஜன சங்கனய’ என்ற பெயரில் போட்டியிடவிருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘சிறீலங்கா நிதாஹஸ் பொதுஜன சங்கனய’ வைத் தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்வதற்கான பத்திரங்கள் நேற்றுக் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

‘மலர் மொட்டு’ இக் கூட்டணியின் சின்னமாக இருக்கும்.

இக் கூட்டணிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன ஆகியோரைத் தலைவர்களாகவும், பசில் ராஜபக்ச பொதுச் செயலாளாராகவும் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளை, ஐ.தே.கட்சியின் பிளவுபட்ட அணிகளும் அவர்களது கூட்டாளிக் கட்சிகளும் ‘அன்னப் பறவை’ சின்னத்தில் போட்டியிடலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரிகா பாண்டாரநாயக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவை மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிகிறது.

பண்டாரநாயக்கா கட்சியிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அங்கத்தவரே எனக் கூறிய அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரா, சுதந்திர தினமன்று தந்திர சதுக்கத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட பண்டாரநாயக்கா பிரதமருடன் அளவளாவியதையும் நினைவுபடுத்தினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சந்திரிகா பண்டாரநாயக்காவுடன் பேசி அவரைத் திருப்பிக் கட்சியில் இணைக்க முயற்சீகும் எனவும், அதே வேளை அவர் ஐ.தே.கட்சியின் கூட்டணிக்கு ஆதரவு தருவார் எனத் தான் நம்பவில்லை எனவும் ஜயசேகர மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email
Related:  இலங்கை மனித உரிமை ஆணையத்தின் தலைவர் அம்பிகா சற்குணநாதன் பதவி விலகினார்!

Leave a Reply

>/center>