வட்டுவாகல் கடற்படை முகாம் விவகாரத்தின் பின்னணியில் சீனா?

சிங்களப் பெண்ணைத் திருமணம் முடித்த சீனப் பிரஜைக்கு வட்டுவாகலில் 50 ஏக்கர் நிலம்?

முல்லைத்தீவு, வட்டுவாகலில் கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 612 ஏக்கர் நிலத்தைப் பலவந்தமாகச் சுவீகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் நேற்று பொதுமக்கள் தெரிவித்த பலத்த எதிர்ப்பினால் மீண்டுமொருதடவை தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட, தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடு செய்யப்போவதாகவும், இந் நிலங்களுக்குரியவர்கள் அவ்விடத்துக்கு 9 மணிக்கு (நேற்று) வந்து குறித்த நிலங்களை அடையாளம் காட்டுமாறும் முல்லைத்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் அரச அதிகாரிகள் காலை 7 மணிக்கே அங்கு வந்துவிட்டனர் எனவும் அப்போது அங்கு மிகவும் சொற்பமான மக்களே கூடியிருந்தனர் எனவும் கூறப்பட்டது.

செய்தியறிந்து பின்னர் பொதுமக்களும் சில அரசியல்வாதிகளும் அவ்விடத்துக்கு வந்து கண்டன எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். காலை 7:45 மணிக்கு நில அளவைத் திணைகள அதிகாரிகள் கடற்படை முகாமிற்குள் நுழைய முற்பட்டபோது அங்கு அமைதியின்மை ஏற்பட்டதாகவும் காலை 7.45 அளவில் கடற்படை முகாமிற்குள் நிந்ற நில அளவை திணைக்களத்தினரை வெளியேறுமாறு கோரி மக்கள் கோஷமிட்டனர் எனவும் அறியப்படுகிறது . இதந்போது அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்திருந்த அரசியல்வாதிகள், பொதுமக்களுடன் பொலிசார் கலந்துரையாடி இவ் விடயத்தில் மாவட்டச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றை எடுக்கும்வரை நில அளவையைப் பிந்போடுவதென இணக்கம் காணப்படடது.

இருப்பினும் நில அலவை அதிகாரிகள் இரகசியமாக நில அளவையில் ஈடுபடுவதாக வந்த செய்தியை அடுத்து வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் பொதுமக்கள் வீதி மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 3 மணித்தியாலங்களுக்கு இப் பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது. அப்போது முகாமிற்குள் இருந்து வெளியேறிய நில அளவைத் திணைக்களத்துக்குரிய வாகனத்தை தடுத்து நிறுத்த மக்கள் முயன்றபோது மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நில அளவைத் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டப் பணிப்பாளரும், மேலதிக அரசாங்க அதிபரும் மக்களோடு கலந்துரையாடி மீண்டும் அமைதியை ஏற்படுத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இக் களேபரத்தின்போது அரசாங்க அதிகாரிகளோடு சில சீனப்பிரஜைகள் காணப்பட்டதாகவும் பொதுமக்கள் சிலருக்கும் இச் சீனப் பிரஜைகளுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இங்கு வந்திருந்த ஒரு சீனப் பிரஜை தான் சிங்களப் பெண்ணைத் திருமணம் முடித்த காரணத்தால் தனக்கும் இந் நிலத்தில் 50 ஏக்கர் இருக்கிறது எனக் கூறியதாக ஒரு பொதுமகந் தெரிவித்தார்.

வட பகுதியில் சில நிலங்களை சீன நிறுவனங்கள் வாங்கியுள்ளதாகவும், கடலட்டை போன்ற தொழில் முற்சிகளுக்காக அதை அவர்கள் பாவிப்பதில் பிரச்சினை இல்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாகவும் ஏற்கெனவே செய்திகள் வந்திருந்தன. இந்நிலையில் தொழில்முயற்சிகள் எந்ற போர்வையில் சீனா இலங்கை கடற்படையுடன் இணைந்து வடபகுதியில் கடற்படைத் தளங்களை அமைக்க முயல்கிறதா என்ற சதேகத்தை வட்டுவாகல் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. (நியூஸ் ஃபெஸ்ட்)