சிரி லங்கா (11): கூத்தமைப்பின் எதிர்காலம்?
கிசு கிசு கிருஷ்ணானந்தா
வடிவேலர் இன்று வடிவாக வந்திறங்கினார். இருக்கும் பல் குறைவேயானாலும் அத்தனையும் வெளியேதான்.
“சொன்னாக் கேக்கமாட்ட, பாரிப்ப உங்கட ஆக்கள் என்ன செய்திருக்கினமெண்டு”
“என்னண்ணை திடீரெண்டு எங்கட ஆக்கள். ஏன் பொன்னற்ற பேரனைச் சந்திச்சுப் போட்டியள் போல”
“எட கிருசு, ஆளுக்குப் பத்து மில்லியனல்லே வாங்கினவங்களாம்”
“அட கூட்டமைப்பைப் பற்றிச் சொல்ல வாறீங்கள் போல”
“பாவங்கள் அவங்களும் இப்ப என்ன செய்யிறது. பெற்றோல், டீசல் இலாததால கேரளாப் போக்குவரத்தும் குறைஞ்சு போயிட்டுது”
“உண்மை தானண்ணே. வாக்களிக்கிறதுக்கு முதல்ல 10 பேரும் டலஸுக்கெண்டு சுமந்திரன் நெஞ்சை நிமித்திக்கொண்டு சொல்லுது. ஆனாப் பாத்தா ஈரம் காயமுன்ன ஹரின் பெர்ணாண்டோவின்ர பேப்பரில வந்திட்டுது”
“அப்ப என்ன இது இரகசிய வாக்கெடுப்பு?”
“அதில்லப் பகிடி. பிறகு சுமந்திரன் கோஷ்டி ரணிலைச் சந்திக்கேக்க அந்தாள் “உங்கட சில ஆக்கள் எனக்குப் போட்டவை” எண்டு முகத்தில அடிச்சாப்பில சொல்லிப் போட்டுது. கட்சியளை உடைக்கிறதுக்கு அந்தாள் ஒரு விண்ணன்தான்”
“ஆனானப்பட்ட புலியளையே உடைச்சுப்போட்டு தலையைக் குனிஞ்சண்டு சிரிச்சுக்கொண்டு திரிஞ்ச மனிசன் எல்லே. அதுசரி நாலுபேர் காசு வாங்கினவங்களாம் உண்மையே?”
“பொட்டம்மான் உயிரோட இருந்தா நான் நாளைக்குப் பதில் சொல்லுவன்”
“அதுசரி இரகசிய வாக்கெடுப்பெண்டா ஆராரு தனக்குப் போட்டவை எண்டதை ரணில் எப்பிடிப் பகிரங்கமாகச் சொல்லலாம்? இவங்கள் அவரை சூ பண்ணேலாதா”
“அப்ப நீங்க முடிவெடுத்திட்டீங்கள்”
“என்னடாப்பா இந்த உலகமே பேசுது. இதுவும் ரணிலின்ர நரி வேலையாத்தான் இருக்கும். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிறதில அந்தாள் கெட்டிக்காரன். காசு குடுத்தாங்களோ இல்லையோ மந்திரிப்பதவி அது இதுவெண்டு ஏமாத்தியிருப்பாங்கள். உண்மையா நேர்மையான மனிசன் எண்டா ரணில் கட்சித் தலைமையளோட தான் பேரம் பேசியிருக்க வேணும். தனிப்பட்ட எம்பிமாரைச் சந்திக்கிறது கட்சிகளை உடைக்கிறதுக்கு. இப்ப்டித்தான் அந்தாள் அரகாலயாப் பெடியளையும் உடைச்சது”
“உண்மைதானண்ணே. அதுதான் இலங்கை அரசியல்”
“என்னைப் பொறுத்தவரையில கூட்டமைப்பை ஏன் சனம் கூத்தமைப்பு எண்டு சொல்லுதுகள் எண்டு இப்ப விளங்குது. அந்த அமைப்புக்குள்ள நிறையக் கூத்தாடிகள் இருக்கினம். ஒரு உடுக்கோட இவங்களைச் சன்னதம் கொள்ள வைக்கலாம். நான் நினைக்கிறன் கூட்டமைப்பின்ர காலம் முடிஞ்சுபோச்சு. அவை கலைஞ்சு போறதுதான் நல்லது”
“அது தான் நடக்கும். தலைவர் சம்பந்தனாலதான் அது ஒட்டிக்கொண்டு இருக்கு. ஆனா அந்தாள் போறதுக்கு முதல்ல ரணில் அதை உடைச்சுப்போடும் போல இருக்கு”
“போத்தில்லை இருக்கிற கள்ளைக் கல்க்கிப்போட்டு விட்டா மண்டி அடியில செட்டில் பண்ணிறதுபோல ரணில் கூட்டமைப்பை இப்ப கலக்கி விட்டிருக்குது. ஆரு மண்டியிடுவினம் ஆரு நெஞசை நிமித்திக்கொண்டு நிப்பினம் எண்டு கெதியில தெரியும் தானே”
“இப்பிடி உங்களைப் போல ஆக்கள் கலக்கு கலக்கெண்டு கலக்கிறதினாலதான் சனம் எப்பவும் தெளிவா இருக்குது எண்டு நீங்க நினைக்கிறியள் ஆனா மண்டியும் எங்கயும் போகேல்ல எண்டதையும் நினைவில வச்சிருங்கோ”
வடிவேலருக்கு கொஞ்சம் சுட்டுப் போட்டுது போல. எதுவும் சொல்லாமலேயே மாறிவிட்டார்.