வடமாகாண ஆளுனர், ஐ.ஒன்றியத் தூதுவர் குழு யாழ்ப்பாணத்தில் சந்திப்பு!

Spread the love

ஜனவரி 17, 2020

ஐரோப்பிய ஒன்றிய தூதுவரும் குழுவுவினரும் வடமாகாண ஆளுனரைச் சந்தித்தனர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டெனிஸ் சைபி தலைமையில் அதன் தூதுக்குழு ஒன்று, வடமாகாண யாழ். பாதுகாப்புப்படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனெரல் றுவான் வணிகசூரியாவை படைத் தலைமையகத்தில் சந்தித்து வடமாகாணம் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து உரையாடியது. இச் சந்திப்பில் வடமாகான ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸும் உடனிருந்தார்.

இச் சந்திப்பின்போது, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடியகற்றல் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டதாகவும், வடமாகாணம் சம்பந்தப்பட்ட விடயங்களை தளபதி வணிகசூரியா விரிவாக எடுத்துரைத்தார் எனவும் ‘கொழும்பு கசட்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் குழுவினரும் வடமாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை அவரது அலுவலகத்திலும் சந்தித்து உரையாடினர். இச் சந்திப்பின்போது வடமாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் உரையாடப்பட்டதாக ஆளுனர் அலுவலகத்தின் இணையத்தளம் கூறுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

>/center>