வடமாகாண ஆளுனராக கலாநிதி ஜீவன் தியாகராஜா நியமனம்


மனிதாபிமான ஆணையங்களின் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி ஜீவன் தியாகராஜா புதிய வடமாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 இல் நியமிக்கப்பட்ட ஆளுனர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவ்விடத்திற்கு கலாநிதி ஜீவன் நியமிக்கப்படுகிறார்.

ஜீவன் தியாகராஜா நீண்ட காலமாக மனிதாபிமான அமைப்புகளுடன் பணியாற்றி வருபவர். மனித உரிமைகள் இன்ஸ்டிடியூட் மற்றும் மனிதாபிமான ஆணையங்களின் கூட்டமைப்பு (Consortium of Humanitarian Agencies (CHA)) ஆகியவற்றின் தலைவராக இருக்கும் அவர் கடந்த வருடம் தேர்தல் ஆணையாளராக நியமனம் பெற்றிருந்தார்.

2004 ஆழிப் பேரலை அனர்த்தம், பின்னர் இறுதிபோர் ஆகிய இடர்க் காலங்களில் ஜீவன் தியாகராஜா பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

தேர்தல் ஆணையாளர் பதவியைத் துறந்து ஆளுனர் பதவியைத் தான் எடுக்கவிருப்பதாக அவர் டெய்லி மிரர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.