இலங்கையின் 9 மாகாணங்களிலும் ஆங்கிலக் கல்வித் தராதரத்தில் வட மாகாணம், கடந்த பத்து வருடங்களாகத், தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது. இதனால் கவலையும் அக்கறையும் கொண்ட அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இலங்கையில் கடந்த பதினான்கு வருடங்களாகப் பல நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் IMHO USA, வடமாகாணத்தில் ஆங்கில ஊக்குவிப்புக்கான செயற்திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.
இத் திட்டத்தில் பின்வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்:
- முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு வாய்மொழிப் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்ட கற்கைகள்
- மூன்றாம், நான்காம், ஐந்தாம் தர மாணவர்களுக்கு வாசிப்பபை அடிப்படையாகக் கொண்ட கற்கைகள்
- 200 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு செறிவான ஆங்கிலப் பயிற்சிகள்
ஆகிய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.
இத் திட்டங்களை விளக்கும் ஆரம்ப நிகழ்வில், கல்வியமைச்சின் வட மாகாண செயலாளர் திரு இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
இத் திட்டத்திற்காக அனைத்துலக மருத்துவ நல அமைப்பு US$ 30,000 டாலர்களை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்குகொண்டு அன்பளிப்புகளைச் செய்ய விரும்புவோர் இத் தொடுப்பின் மூலம் இணைந்து பங்களிப்புகளைச் செய்து கொள்ளலாம்.